ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

திமுகவின் ‘பி’ டீம் ஓ.பன்னீர்செல்வம்; மா.செ.க்கள் கூட்டத்தில் பொங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

திமுகவின் ‘பி’ டீம் ஓ.பன்னீர்செல்வம்; மா.செ.க்கள் கூட்டத்தில் பொங்கிய திண்டுக்கல் சீனிவாசன்

அதிமுக மா.செ.க்கள் கூட்டம்

அதிமுக மா.செ.க்கள் கூட்டம்

திமுகவின் ‘பி’ டீம் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனித் தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். இதனிடையே அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எனக் குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வரவு - செலவு அறிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது.

இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “ஓ.பன்னீர்செல்வம் திமுகவின் பி டீமாக செயல்படுகிறார். அவரிடம் இருப்பது பணத்தின் மூலம் திரண்ட கூட்டம்” என்று காட்டமாக விமர்சித்தார். அதுபோலவே முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “பொருட்களில் போலியானவற்றை பார்த்திருப்போம். ஆனால், அரசியலிலேயே போலியானவர் ஓ.பன்னீர்செல்வம்” என்று விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

First published:

Tags: AIADMK, DMK, O Panneerselvam