முகப்பு /செய்தி /Breaking and Live Updates / மேஜிக்கை உருவாக்குவோம்... - திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைவது குறித்து மாதவன் கருத்து

மேஜிக்கை உருவாக்குவோம்... - திருச்சிற்றம்பலம் இயக்குநருடன் இணைவது குறித்து மாதவன் கருத்து

மாதவன்

மாதவன்

திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் ஜவகர் ஆர்.மித்ரன் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க மாதவன் ஒப்பந்தமாகியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

தனுஷ் நடிப்பில் ஜவஹர் ஆர்.மித்ரன்  இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. இந்த திரைப்படம் எந்த ஒரு ஆரவாரமுமின்றி வெளியாகி பெரும் வெற்றி அடைந்தது. இந்த திரைப்படத்தில் எந்தவிதமான பஞ்ச் வசனம், ஆக்‌ஷன் காட்சிகள், துப்பாக்கி சத்தம் என  ஆர்ப்பாட்டமும் இடம்பெறவில்லை. அமைதியான திரைக்கதையும், அழகான பாடல்களும் இடம் பெற்றிருந்தன. அது திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தது.

திருச்சிற்றம்பலம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 70 கோடி ரூபாய் வசூல் செய்தது. மேலும் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது. இதனால் படத்தின் இயக்குனர் ஜவகர் ஆர். மித்ரன் மீது பல நடிகரின் கவனம் திரும்பியது. இந்த நிலையில் மாதவன் நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்க ஜவகர் ஆர்.மித்ரன் ஒப்பந்தமாகியுள்ளார்.

மாதவன் இறுதியாக இயக்கிய நடித்த Rocketry  திரைப்படம் தமிழில் வெளியாகியிருந்தது. அதன் பிறகு ஜவகர் ஆர்.மித்ரன் இயக்கும் தமிழ் படத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜவஹர் ஆர்.மித்ரன் யாரடி நீ மோகினி, குட்டி உள்ளிட்ட படங்களை இயக்கியிருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக புதிய திரைப்படங்களின் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தார். இந்த நிலையில் திருச்சிற்றம்பலம் படம் அவரை மீண்டும் பிஸியாக்கியுள்ளது. மாதவன் - ஜவகர் இணையும் இந்த திரைப்படத்தை மீடியாஒன் குளோபல் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இதுதொடர்பாக இயக்குநர் ஜவகர் ஆர்.மித்ரனுக்கு மாதவன் ட்விட்டரில் அளித்துள்ள பதிலில், ''உங்களுடன் இணைந்து செலவழிக்கவிருக்கும் சிறப்பான நேரங்களுக்கும் மேஜிக்கை உருவாக்குவதற்கும் காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

First published:

Tags: Actor Madhavan