• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • 25 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

25 ஆண்டுகளுக்கு பிறகு பாலாற்றில் வெள்ளப்பெருக்கு... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

பாலாற்றில் நீர்வரத்து

பாலாற்றில் நீர்வரத்து

கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கர்நாடகா - ஆந்திரா வழியாக வாணியம்பாடி பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Share this:
    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் தமிழக ஆந்திரா, கர்நாடகா மாநில வனப்பகுதிகளில கடந்த ஒரு மாத காலமாக பெய்து வரும் கன மழையால் கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள பேத்தமங்கலம் மற்றும் ராமசாகர் எரி நிரம்பி உள்ளதால் இரண்டு தினங்களுக்கு முன்பு ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டன.

    மேலும் கர்நாடக மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் புல்லூர் என்ற இடத்தில் ஆந்திரா அரசு கட்டி உள்ள தடுப்பணை  நிரம்பி தமிழக பாலாற்றில் தண்ணீர் வருவதால் ஆவாரங்குப்பம், அம்பலூர் பகுதிகளில் உள்ள பாலாற்று வழியாக  கொடையாஞ்சி, வாணியம்பாடி, ஆம்பூர் வழியாக வெள்ளம் பாய்ந்து ஓடுகிறது

    பாலாற்றங்கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் சுமார் 600 ஏரிகள் உள்ளன. இதில் 350 க்கும் மேற்பட்ட ஏரிகள் பாலாற்று படுகையில் அமைந்துள்ளது. அதில் 315 ஏரிகள் பொது பணித்துறை பராமரிப்பில் உள்ளது. பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளது.



    மணல் கொள்ளையால் ஆறு பள்ளமாகவும் ஏரிகள் மேடாக உள்ளது. இதனால் சில ஏரிகள் பாலாற்றில் வெள்ளம் வந்தும் நிரம்பாத நிலை உள்ளது. மேலும் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி ஏரிகளுக்கு நீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு பின்னர் பேத்தமங்கலம் ஏரி திறந்து விட்டுள்ளதால் அதனுடைய உபரி நீர் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

    Also read : தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட்! - வானிலை மையம்

    இதன் காரணமாக வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் பாலாற்று படுகையில் உள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும், குடிநீர் பஞ்சம் தீரும் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    செய்தியாளர்: M.வெங்கடேசன், திருப்பத்தூர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: