ஜான்பாண்டியன் எங்களுக்கு தேவையில்லை - அதிமுக தலைமை அலுவலகத்தில் எழும்பூர் தொகுதி தொண்டர்கள் போராட்டம்

அஇஅதிமுக அலுவலகம்

எழும்பூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதால் ஏமாற்றம் அடைந்த அதிமுக தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் செய்து வருகின்றனர்.

 • Share this:
  எழும்பூர் தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கியதால் ஏமாற்றம் அடைந்த அதிமுக தொண்டர்கள் அதிமுக தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் செய்து வருகின்றனர்.

  அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்று மாலை வெளியானது. 171 சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் குறித்த அறிவிப்பும் நேற்று வெளியானது. பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 23 தொகுதிகள், பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகள் குறித்த அறிவிப்பு வெளியானது. அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் தொகுதியும், என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சிக்கு பெரம்பூர் தொகுதி ஒதுக்கியுள்ளனர். புரட்சிபாரதம் கட்சிக்கு கே.வி. குப்பம் தொகுதியும், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு கும்பகோணம் சட்டபேரவை தொகுதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

  இந்நிலையில் அதிமுக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு எழும்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டதை அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. இதனையடுத்து தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட ஏராளமான தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  “ஜான்பாண்டியன் எங்களுக்கு தேவையில்லை. 2001-ம் ஆண்டு ஜான்பாண்டியன் இத்தொகுதியில் நின்று வெற்றி வாய்ப்பை பறிக்கொடுத்தார். 2011-ல் அம்மா இருந்த போது கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. தேமுதிக வேட்பாளரை நாங்கள் வெற்றிப்பெற வைத்தோம். ஆனால் அதன்பின்னர் அவர்கள் எங்களை கண்டுக்கொள்ளவே இல்லை. எனவே எழும்பூர் தொகுயில் அதிமுக தொண்டர் யாரை வேண்டுமானாலும் நிறுத்துங்கள். நாங்கள் வெற்றிப்பெற வைக்கிறோம். எழும்பூர் தனித்தொகுதி இங்கு பட்டியலின மக்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். ஜான்பாண்டியனை இங்கு ஏற்க முடியாது. அதிமுகவில் வாரிசு அரசியல் கிடையாது. இங்கு யார் வேண்டுமானாலும் எந்தப்பதவிக்கு வரலாம் எனவே உண்மையான அதிமுக தொண்டனை வேட்பாளராக அறிவிப்பு வெளியிடுங்கள்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
  Published by:Ramprasath H
  First published: