• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • சொந்த தொகுதியை பார்த்துக் கொள்ள முடியாதவர், தமிழகத்தை எப்படி பார்த்துக் கொள்வார் - ஸ்டாலினை விமர்சித்த குஷ்பு

சொந்த தொகுதியை பார்த்துக் கொள்ள முடியாதவர், தமிழகத்தை எப்படி பார்த்துக் கொள்வார் - ஸ்டாலினை விமர்சித்த குஷ்பு

குஷ்பு

குஷ்பு

10 ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக கொளத்தூரையே சரியாக பார்த்துக் கொள்ள முடியாதவர் , தமிழகத்தை எப்படி பார்த்துக் கொள்வார் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

  • Share this:
    சென்னை பட்டினப்பாக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பாஜக சார்பில் நிவாரணம் பொருட்களை தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மழைவெள்ள பாதிப்பில் திமுகவில் முதலமைச்சரை தவிர யாரும் வேலை பார்க்கவில்லை. முதல்வரும் போட்டோவுக்காகத் தான் சென்றார். கொளத்தூர் தொகுதியே முழுதாக மழை வெள்ளம் சூழ்ந்தது. 10 ஆண்டில் சட்ட மன்ற உறுப்பினராக ஸ்டாலின் கொளத்தூரில் செய்தது என்ன, தொகுதியையே சரியாக பார்க்க முடியாதவர் , தமிழகத்தை எப்படி பார்ப்பார்..? என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து பேசிய அவர், மழை வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் தன்னார்வலர்கள் , தன்னார்வ அமைப்புகள் அதிமுக , பாஜகதான் வேலை பார்த்தனர். மழை பாதிப்புக்கு அதிமுகதான் காரணம் என திமுகவினர் கூறுகின்றனர். கடவுள் அதிமுக சொல்வதை கேட்டு கன மழை பெய்ய வைக்கிறாரா..? அதிமுக வானத்திற்கு போன் செய்து மழை வர வைத்ததா..? 2011 வரை ஆட்சியில் இருந்தது திமுகதான். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படுவது இயல்புதான்.அதிமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்த திமுகவுக்கு உரிமை இல்லை என்றார்.

    மேலும் ஜெய் பீம் படம் இன்னும் பார்க்கவில்லை. பார்த்த பிறகு கூறுகிறேன். கதாபாத்திரத்தின் உண்மையான நபருக்கு சூர்யா இன்னும் உதவவில்லை என கூறுகின்றனர். சூர்யாவுக்கு ஆதரவு கொடுத்தே ஆக வேண்டும் என எனக்கு நிர்பந்தம் இல்லை. தன்னை பாதுகாத்து கொள்வது எப்படி என சூர்யாவுக்கு நன்றாக தெரியும் என்றும் கூறினார்.

    இதனிடையே  நிவாரண உதவியாக சிறிய பால் பாக்கெட்டும் , பிரட் பாக்கெட் ஒன்றும் மட்டுமே வழங்கப்படுவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குஷ்பு, பசியில் இருப்பவர்களுக்கு ஒரு துண்டு பிரட் கூட அமிர்த்தம் போல் இருக்கும் என்று கூறினார். அங்கிருந்த பெண்களிடம் உங்களுக்கு கிடைத்த நிவாரணம் திருப்தியானதுதானே என குஷ்பு கேட்ட நிலையில் ,அவர் எதிர்பாரத வகையில் வரிசையில் நின்ற பெண் ஒருவர் , " இன்னும் கூட செய்தால் நன்றாக இருக்கும். பிரட் , பால் பாக்கெட் ஒருவேளைக்கு கூட உதவாது , 5 கிலோ அரசி கொடுந்திருக்கலாம் " என்று கூறினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: