ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

சிம் கார்டு வாங்குவதில் வாக்குவாதம்! நடிகையை கடைக்குள் வைத்து லாக் செய்த ஊழியர்கள்.!

சிம் கார்டு வாங்குவதில் வாக்குவாதம்! நடிகையை கடைக்குள் வைத்து லாக் செய்த ஊழியர்கள்.!

அன்னாராஜன்

அன்னாராஜன்

பிரபல நடிகையான அன்னா ராஜனை கடைக்குள் வைத்து ஊழியர்கள் பூட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அன்னா ராஜன்

  மலையாளத்தில் எதிர்பார்ப்பின்றி வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் அங்கமாலி டைரிஸ். லிஜோ ஜோஸ் இயக்கிய இந்த திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் லிச்சியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்த உருவாக்கிக் கொண்டவர் அன்னா ராஜன். அதன்பின்னர் இவர் ஐயப்பனும் கோஷியும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

  இந்நிலையில் சோஷியல் மீடியாவிலும் தற்போது செம ஆக்டீவாக இருக்கும் அன்னாராஜன் தற்போது தனியார் டெலிகாம் நிறுவனத்தின் மீது போலீசாரிடத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். ஆலுவா காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், புதிய சிம்கார்ட் வாங்க சென்ற இடத்தில் தனியார் டெலிகாம் நிறுவன ஊழியர்கள் தன்னை அறையில் அடைத்துவைத்து பூட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
   
  View this post on Instagram

   

  A post shared by anna rajan (@annaspeeks)  நடந்தது என்ன?

  கேரளாவின் ஆலுவாவில் உள்ள தனியார் டெலிகாம் நிறுவனத்துக்கு புதிய சிம் கார்ட் தொடர்பாக விசாரிக்க சென்றுள்ளார் அன்னாராஜன். புது சிம்கார்ட் வாங்குவதில் நடிகை அன்னாராஜனுக்கும், அங்குள்ள ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

  Also Read: 'அசிங்கமா போச்சு.. இந்தியாவே வரமாட்டேன்' - தூங்குற போட்டோவால் மனம் நொந்த நடிகை!

  வாக்குவாதம் முற்றவே, அன்னாராஜனை அங்குள்ள ஊழியர்கள் ஒரு அறையில் வைத்து பூட்டியதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் இரு தரப்பையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை செய்து வைத்துள்ளனர்.
   
  View this post on Instagram

   

  A post shared by anna rajan (@annaspeeks)  இது குறித்து தெரிவித்துள்ள அன்னா ராஜன், '' எனக்கு டூப்ளிகேட் சிம்கார்ட் வாங்குவதற்காக நான் அந்த டெலிகாம் நிறுவனத்துக்குச் சென்றேன். நான் நடிகை என்பதை அவர்களிடத்தில் காண்பித்துக்கொள்ளவில்லை. பின்னர் சிம்கார்ட் தொடர்பான பேச்சுவார்த்தை வாக்குவாதமாக மாறியது. அங்குள்ள ஊழியர்கள் என்னிடம் தகராறு செய்தனர். என்னை உள்ளேயே வைத்து கதவை மூடிவிட்டனர். நான் புகார் அளித்த நிலையில் அவர்கள் மன்னிப்பு கோரினர். அதனால் வழக்கை திரும்பப்பெற்றேன் என்றார்.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Malayalam actor