விஜய் மக்கள் இயக்கம்
நாமக்கல் நகர இளைஞர் அணி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பால், பிரட், முட்டை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
தளபதி விஜய் மக்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த உதவிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்படி, நாமக்கல் நகரில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களான விலையில்லா பால் முட்டை ரொட்டி 1 வருடத்திற்கு வாரந்தோறும் வழங்கப்படும்.
இந்த நல உதவியை நாமக்கல் நகரின் 32வது வார்டில் விஜய் மக்கள் இயக்கத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் S.N சதீஷ் துவக்கி வைத்தார்.
இதில் விஜய் மக்கள் இயக்கத்தின் நாமக்கல் நகர இளைஞரணி தலைவர் பிரபு பள்ளி மாணவர்களுக்கு பால் ரொட்டி முட்டை ஊட்டச்சத்து கிடைக்கக்கூடிய பொருட்களை வழங்கினார்.
இதையும் படிங்க :
நொய்டா சர்வதேச பட விழாவில் விருதுகளை வென்று குவித்த ஜெய் பீம்!
இந்த நிகழ்ச்சியில் நகர இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட நகர நிர்வாகிகள் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் கணிசமான அளவுக்கு வெற்றியை பெற்றிருந்தனர். அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் பங்கேற்பார்கள் என்பதால், மாநில அளவில் ரசிகர்கள் உற்சாகத்துடன் உள்ளனர்.
இதையும் படிங்க :
வெளிவரும் முன்பே வசூலில் வாகை சூடிய விஷால் படம்...!
செய்தியாளர் : ரவி குமார், நாமக்கல்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.