ஹோம் /நியூஸ் /Breaking and Live Updates /

ரேஸ் மீதான பிணைப்பு! அஜித்தின் மாஸ் வாட்ஸ் அப் டிபி! அமீர் ஷேர் செய்த போட்டோ!

ரேஸ் மீதான பிணைப்பு! அஜித்தின் மாஸ் வாட்ஸ் அப் டிபி! அமீர் ஷேர் செய்த போட்டோ!

அஜித்

அஜித்

அஜித்துடனான வாட்ஸ் அப் சேட்டை ஷேர் செய்துள்ள அமீர் எனக்கு தேவையான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  துணிவு

  நேர்க்கொண்ட பார்வை, வலிமை ஆகியப் படங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் கூட்டணி புதிய படத்தில் இணைந்துள்ளது. அஜித்தின் 61-வது படமான இதில் நடிகை மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். ஜிப்ரன் இசையமைக்கிறார். இப்படத்திற்காக அஜித் முற்றிலும் மாறுபட்ட இரண்டு கெட் அப்களில் நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஏகே 61' படத்தில் அஜித் கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடிப்பதாகக் கூறப்படுகிறது . வங்கிகொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. துணிவு எனப்பெயரிடப்பட்ட இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

  வாட்ஸ் அப் டிபி..

  இதற்கிடையே துணிவு படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான பாவ்னி மற்றும் அமீர் இணைந்திருப்பதாக சில தினங்களுக்கு முன்பு தகவல் பரவியது. இந்நிலையில் பிக்பாஸ் ஜோடியான அமீரும் பாவ்னியும் அஜித்துடன் அமர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலானது. இது தொடர்பாக அஜித்துடனான வாட்ஸ் அப் சேட்டை ஷேர் செய்துள்ள அமீர் எனக்கு தேவையான ஒன்று எனக் குறிப்பிட்டுள்ளார்.

  அதில் Ak sir என அஜித்குமாரின் பெயரை அமீர் சேமித்து வைத்துள்ளார். அமீர் ஷேர் செய்த புகைப்படத்தில் இருந்து அஜித்தின் வாட்ஸ் அப் டிபியை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். கார் ரேஸில் பங்கேற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வாட்ஸ் அப் டிபியாக வைத்துள்ளார் அஜித். அதனை ஷேர் செய்து வரும் அவரது ரசிகர்கள் அஜித்துக்கு ரேஸ் மீதான பிணைப்பை இது காட்டுகிறது என பதிவிட்டு வருகின்றனர்.

  தற்போது துணிவு படத்தின் படப்பிடிப்பு அடுத்தகட்டமாக தாய்லாந்தில் நடைபெற உள்ளது. இத்துடன் படப்பிடிப்பு நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்படி நடந்தால் விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கும், அஜித்தின் துணிவு படத்திற்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணிவு படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். மேலும் படத்தில் ஜான் கோக்கன், ஆரி, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வலிமை படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ்ஷா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் துணிவு படத்திற்கு இசை அமைக்கிறார்.

  Also Read: அஜித் எடுத்த செல்ஃபி! குஷியில் அமீர்-பாவ்னி! துணிவு ஷூட்டிங்கில் இணைந்த பிக்பாஸ் ஜோடி!

  அமீர்- பாவ்னி ஜோடி!

  விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 5வது சீசன் மூலம் மக்களிடையே அறிமுகமானவர்கள் அமீர்-பாவ்னி. பிக்பாஸூக்கு பிறகு சின்னத்திரையில் பிரபல ஜோடியாக மாறிவிட்ட இவர்கள் விளம்பரங்களிலும் ரியாலிட்டு ஷோவிலும் பங்கேற்று வருகின்றனர். பிபி ஜோடிகள் என்ற ரியாலிட்டி ஷோவின் டைட்டில் பட்டத்தையும் இவர்களே வென்றனர். சின்னத்திரை புகழுக்கு பின்னர் இருவரும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்நிலையில் இருவரும் துணிவு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. தற்போது அஜித்துடன் எடுக்கப்பட்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது. துணிவு படத்தில் நடித்துவரும் இருவருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Actor Ajith, Ajithkumar