முகப்பு /செய்தி /Breaking and Live Updates / ஆதார் கார்டில் சான்று இல்லாமல் முகவரி மாற்ற முடியும்.. எப்படி தெரியுமா?

ஆதார் கார்டில் சான்று இல்லாமல் முகவரி மாற்ற முடியும்.. எப்படி தெரியுமா?

ஆதார் கார்டு

ஆதார் கார்டு

Aadhaar Card address change : உங்கள் வீட்டு முகவரி சான்று இல்லாமல் ஆதார் அட்டையில் எளிமையாக முகவரியை மாற்றலாம்.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதார் அட்டையில் முகவரியை மாற்ற இனி எந்தவொரு முகவரி சான்றிதழையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. மக்களின் வசதிக்காக ஆவண சான்று இல்லாமலேயே முகவரியைப் புதுப்பிக்கும் வகையில் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் மூலம், வேறு வீடுகளுக்குக் குடிபெயரும் மக்கள் ஆதார் அட்டையில் முகவரியை மாற்றும் நீண்ட செயல்முறை குறித்து இனி கவலைப்படத் தேவையில்லை. இப்போது ஒரு புதிய வீட்டிற்குக் குடிபெயரும் மக்கள் எந்த ஒரு ஆவண சான்றுகளையும் வழங்காமல் UIDAI போர்ட்டல் மூலம் கார்டில் உள்ள முகவரியை எளிதாகப் புதுப்பிக்க முடியும்.

குறிப்பாக, ஆதார் அட்டைதாரர்கள் முகவரி சரிபார்ப்பின் ஒப்புதல் மற்றும் அங்கீகாரத்துடன் முகவரி மாற்றத்தை மேற்கொள்ளலாம். அதில் முகவரி சரிபார்ப்பவர் ஒரு குடும்ப உறுப்பினராகவோ, உறவினர், நண்பர் அல்லது நில உரிமையாளராகவோ இருக்கலாம். அதாவது, ஆதார் அட்டைதாரர் தங்கள் முகவரியை ஆதாரமாகப் பயன்படுத்தச் சரிபார்ப்பவர் அனுமதிக்க வேண்டும்.

கவனிக்க வேண்டியது என்னவென்றால், குடியிருப்பவர் மற்றும் முகவரி சரிபார்ப்பவர் இருவரும் தங்கள் மொபைல் எண்ணை ஆதாரில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது புதுப்பித்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சரி UIDAI போர்ட்டல் மூலம் ஆதார் அட்டையில் உங்கள் புதிய முகவரியை ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரம் இல்லாமல் எவ்வாறு புதுப்பிக்கலாம் என்பதற்கான விதிமுறைகளைப் பின்வருமாறு காணலாம்.

Also Read : ஜியோ vs ஏர்டெல் vs விஐ.. மலிவான திட்டங்கள் இதோ.. எது சிறந்த பிளான்?

1. UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று உங்கள் ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.

2. ‘இரகசியக் குறியீடு வழியாகப் புதுப்பிப்பு முகவரி’ (Update Address via Secret Code) என்பதைக் கிளிக் செய்து சரிபார்ப்பவரின் ஆதார் தகவலை உள்ளிடவும். புதுப்பித்தல் நோக்கத்திற்காக ஒருவரின் வசிப்பிடத்தை உங்களுடைய சொந்த முகவரியாகப் பயன்படுத்த அனுமதிக்கும் எவரும் சரிபார்ப்பவராக இருக்கலாம்.

3. இணையத்தில் நுழைந்தவுடன், நீங்கள் சேவை கோரிக்கை எண்ணை (Service Request Number - SRN) பெறுவீர்கள்.

4. இதையடுத்து உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சரிபார்ப்பவருக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். அதை அவர் கிளிக் செய்ய வேண்டும்.

5. இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, சரிபார்ப்பவர் தங்கள் சொந்த ஆதார் அட்டை தகவலைப் பயன்படுத்தி உள்நுழைந்து செயல்முறைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

6. பிறகு இரண்டாவது எஸ்எம்எஸ் ஒரு OTP(ஒரு முறை கடவுச்சொல்) உடன் சரிபார்ப்பவருக்கு அனுப்பப்படும். அதை நிரப்ப வேண்டும். பிறகு வெரிபை என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இந்த செயல்முறைக்குப் பிறகு உங்களுக்கு SRN எண் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படும்.

7. சரிபார்ப்பவர் அவர்களின் ஒப்புதலை அளித்தவுடன், நீங்கள் அடுத்த செயல்முறையை முடிக்க ஒரு முறையான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். எனவே, அதை மனதில் கொண்டு, உங்களுக்குக் கொடுக்கப்பட்ட SRN எண்ணுடன் உள்நுழைந்து புதிய முகவரியை மதிப்பாய்வு செய்து தேவைக்கேற்ப திருத்த வேண்டும்.

8. அனைத்து வழிமுறைகளையும் முடித்த பிறகு, நீங்கள் கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.

9. அனைத்தும் உறுதி செய்யப்பட்டவுடன், போஸ்டில் ஒரு இரகசியக் குறியீட்டோடு ஒரு ‘ஆதார் சரிபார்ப்பு கடிதத்தையும்’ பெறுவீர்கள். அதைப் பயன்படுத்தி, நீங்கள் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலில் (SSUP) உள்நுழைந்து உங்களுக்கு வழங்கப்பட்ட இரகசியக் குறியீட்டைக் கொண்டு உங்கள் முகவரியைப் புதுப்பிக்க வேண்டும்.

10. இதில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் புதிய முகவரியை மீண்டும் ஒருமுறை மதிப்பாய்வு செய்து உங்கள் இறுதி கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். உங்கள் புதிய முகவரியின் புதுப்பிப்பு நிலையைக் கண்காணிக்க ஒரு புதுப்பிப்பு கோரிக்கை எண்ணை (URN) நீங்கள் பெறுவீர்கள்.

Also Read : போஸ்ட் ஆபிஸில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி அதிகமாகச் சேமிக்கலாம்..!

ஏற்கனவே சொன்னது போல இந்த செயல்முறையை முடிக்க, சரிபார்ப்பவர் மற்றும் முகவரியை மாற்றும் ஆதார் அட்டைதாரர் இருவரும் தங்கள் மொபைல் எண்களை தங்களது ஆதார் எண்ணுடன் இணைந்திருக்க வேண்டும் அல்லது புதுப்பித்திருக்க வேண்டும் மற்றும் தற்போதுள்ள ஆதார் உடன் பதிவு செய்திருக்க வேண்டும். மேற்கண்ட செயல்முறைகளை ஆரம்பித்தவுடன் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும். எனவே இந்த முகவரி மாற்றத்தை அப்டேட் செய்யும்போது சரிபார்ப்பவரும் நீங்களும் ஒரே நேரத்தில் போரட்டலை அணுகவேண்டியிருக்கும். எனவே இருவரும் அந்த சமயத்தில் அப்டேட் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் அது செல்லாது.

First published:

Tags: Aadhaar card