Home /News /live-updates /

ஊரடங்கால் முடங்கிய ஹோட்டல்: காரில் பிரியாணி விற்பனை செய்யும் உரிமையாளர்

ஊரடங்கால் முடங்கிய ஹோட்டல்: காரில் பிரியாணி விற்பனை செய்யும் உரிமையாளர்

புதுச்சேரியில் ஊரடங்கால் வீதிக்கு வந்த ஓட்டல் அதிபர் காரில் பிரியாணி விற்பனை செய்து வருகிறார்.

புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் ஆண்டனி என்பவர் நட்சத்திர அந்தஸ்தில் ஓட்டல் நடத்தி வந்தார். இவரது உணவகத்தில், பிரெஞ்சு உணவு வகைகள் அதிகம் இடம்பெற்றிருக்கும்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் உணவகம் மூடப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்காக இன்று ஆண்டனி வீதிக்கு வந்துள்ளார். "கார் பிரியாணி" என புதிய ஐடியாவுடன் களம் இறங்கியுள்ளார் ஆண்டனி.

Also read... சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மேலும் 1000 படுக்கை வசதி... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

ஆண்டனி தனது உணவகத்தில் GSTயுடன் 220 ரூபாய்க்கு விற்ற சிக்கன் பிரியாணியை தற்போது 70 ரூபாய்க்கு விற்கிறார். கார் பிரியாணிக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து முக்கிய சந்திப்புகளில் 4 கார்களில் பிரியாணி விற்று வருகிறார்.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி