சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்டக் குழந்தை திருப்போரூரில் மீட்பு!

இந்தநிலையில், இன்று திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இரண்டு வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஒருவர் குழந்தையை காவல்நிலையத்தில் ஒப்படைந்தார்.

news18
Updated: July 16, 2019, 3:45 PM IST
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்டக் குழந்தை திருப்போரூரில் மீட்பு!
breaking news
news18
Updated: July 16, 2019, 3:45 PM IST
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து காணமால்போன ஒடிசா மாநில தம்பதியின் குழந்தை இன்று திருப்போரூரில் மீட்கப்பட்டது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நேற்று இரவு ஒடிசா மாநிலத் தம்பதியின் இரண்டு வயது குழந்தை காணாமல் போனது. குழந்தை காணாமல் போனது தொடர்பாக, ஒடிசா மாநில தம்பதியினர் சென்ட்ரல் ரயில் நிலைய காவல்துறையிடம் புகார் அளித்தனர்.


அதனையடுத்து, சி.சி.டி.வி காட்சிகளை சோதனை செய்தபோது, சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து அந்தக் குழந்தையை ஒருவர் எடுத்துச் செல்லும் காட்சி இருந்தது. அதேநபர், தாம்பரம் ரயில் நிலையத்திலும் குழந்தையுடன் உள்ள காட்சி கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சி.சி.டி.வி காட்சிகளைக் கொண்டு காவல்துறையின் சிறப்புக் குழு விசாரணையில் இறங்கியது.

இந்தநிலையில், இன்று திருப்போரூர் பேருந்து நிலையத்தில் இரண்டு வயது குழந்தை அழுது கொண்டிருந்தது. அதனைப் பார்த்த ஒருவர் குழந்தையை காவல்நிலையத்தில் ஒப்படைந்தார். குழந்தையை மீட்ட காவல்துறையினர், குழந்தையை மாவட்ட குழந்தைகள் நல குழும அதிகாரிகளிடம் ஒப்படைந்தனர்.

மேலும், காவல்நிலையத்தில் குழந்தைகள் காணாமல் போனதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சென்ட்ரல் ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் குழந்தை தவறவிட்ட பெற்றோருடன் சென்ட்ரல் காவல்துறையினர் செங்கல்பட்டிலிலுள்ள குழந்தைகள் நல குழுமத்துக்கு செல்கின்றனர்.

Loading...

பெற்றோர்கள் குழந்தையைப் பார்த்து உறுதி செய்த பிறகே, கடத்தப்பட்ட குழந்தைதானா என்பது தெரியவரும். இருப்பினும், காவல்துறையினர், அங்க அடையாளங்கள் மற்றும் உடைகளை வைத்து சென்ட்ரலில் கடத்தப்பட்ட குழந்தையாகத்தான் இருக்கும் என்று உறுதி செய்துள்ளனர்.

Also see:

First published: July 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...