• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • Ind vs Eng|ஓவல் டெஸ்ட்: ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு?- இங்கிலாந்து அணியில் 2 முக்கிய வீரர்கள்

Ind vs Eng|ஓவல் டெஸ்ட்: ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு?- இங்கிலாந்து அணியில் 2 முக்கிய வீரர்கள்

இங்கிலாந்து அணிக்குத் திரும்பிய 2 வீரர்கள்.

இங்கிலாந்து அணிக்குத் திரும்பிய 2 வீரர்கள்.

ஜாஸ் பட்லர் 4வது டெஸ்ட் போட்டிக்கு இல்லை என்பதால் அவருக்குப் பதில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பிங் செய்யவிருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் திரும்பியுள்ளனர்.

  • Last Updated :
  • Share this:
    ஜாஸ் பட்லர் 4வது டெஸ்ட் போட்டிக்கு இல்லை என்பதால் அவருக்குப் பதில் ஜானி பேர்ஸ்டோ விக்கெட் கீப்பிங் செய்யவிருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு மார்க் உட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் திரும்பியுள்ளனர்.

    இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி செப்.2 ம்தேதி ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணிக்கு ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் திரும்புகிறார், அநேகமாக சாம் கரனுக்கு குட் பை என்று கருத இடமுண்டு.

    லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வென்று ஹெடிங்லீயில் இன்னிங்ஸ் தோல்வி கண்ட இந்திய அணியின் பேட்டிங்கில் ஒன்றுமேயில்லை. முதல் இன்னிங்சில் 78 ஆல் அவுட், இரண்டாவது இன்னிங்சில் 63 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து இன்னிங்ஸ் தோல்வி கண்டது. தொடரும் 1-1 என்று சமன் ஆனது.

    ஜானி பேர்ஸ்டோ 2 ஆண்டுகளுக்குப் பிறகு விக்கெட் கீப்பிங் கிளவ் அணிகிறார். அதே போல் கெண்ட் அணியின் சாம் பில்லிங்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார்.

    Also Read: பள்ளி, கல்லூரிகள் திறப்பு : அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை

    4வது டெஸ்ட் போட்டிக்கான 15 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி வருமாறு:

    ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது, டேவிட் மலான், ஜோ ரூட், டேன் லார்னஸ், ஜானி பேர்ஸ்டோ, மொயின் அலி, சாம் கரன், கிரெய்க் ஓவர்டன், ஆலி ராபின்சன், ஆண்டர்சன், ஆலி போப், சாம் பில்லிங்ஸ், மார்க் உட், கிறிஸ் வோக்ஸ்

    லீட்ஸ் டெஸ்ட்டுக்கு அணியில் எடுக்கப்பட்ட சாகிப் மஹ்மூத் ஆடாமலேயே விடுவிக்கப்பட்டார். ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு ஓய்வு அளித்தாலும் ஆச்சரியமில்லை. கிறிஸ் வோக்ஸ், மார்க் உட் இருவரும் அணியில் வர வாய்ப்புள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: