• HOME
  • »
  • NEWS
  • »
  • live-updates
  • »
  • சென்னையில் வழக்கறிஞரை கைது செய்ய முயன்ற போலீஸ் : 4 மணிநேரம் நடந்த சாலை மறியல்

சென்னையில் வழக்கறிஞரை கைது செய்ய முயன்ற போலீஸ் : 4 மணிநேரம் நடந்த சாலை மறியல்

Youtube Video

சென்னை அண்ணாசாலை காவல்நிலையத்தில், காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் விளைவாக, 4 மணிநேரத்திற்கும் மேலாக வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மோதலின் பின்னணி என்ன?

  • Share this:
    அண்ணாசாலை காவல்நிலையத்தில் நிலமோசடி வழக்கு தொடர்பாக வழக்கறிஞர் ஆதிகேசவலு என்பவரை மார்ச் 26ஆம் தேதி கைது செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தேர்தல் பணிகளில் அவரை கைது செய்வதில் தாமதம் ஆனதால் ஏப்ரல் 8-ஆம் தேதிக்குள் கைது செய்யும்படி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது இதனையடுத்து முன்ஜாமீன் வாங்குவதற்காக வழக்கறிஞர் ஆதிகேசவலு புதன்கிழமை பிற்பகலில் உயர்நீதிமன்றம் சென்றிருந்தார்.

    இதனை அறிந்த அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் காவலர்கள் இருவர் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளனர். வழக்கறிஞர் ஆதிகேசவலு நீதிமன்றத்துக்கு வெளியே வந்தபோது காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் இரண்டு காவலர்கள் அவரை கைது செய்ய முற்பட்டுள்ளனர்.

    அப்போது வழக்கறிஞர்களான சுப்பிரமணியன் மற்றும் மோகன்தாஸ் ஆகிய இருவர், வழக்கறிஞர் ஆதிகேசவலுவை கைது செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்களும் வழக்கறிஞர்கள் சுப்பிரமணியன் மற்றும் மோகன்தாசைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

    இந்தத் தகவல் தீயாகப் பரவியதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வடக்கு காவல் இணை ஆணையர் துரை குமார் மற்றும் கிழக்கு காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கறிஞர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    மேலும் படிக்க... டீக்கடையில் வடை போட்டு வாக்கு சேகரித்த பெரம்பலூர் தொகுதி தேமுதிக வேட்பாளர்

    காவல் ஆய்வாளர் சந்திரமோகன் மற்றும் உடன் வந்த இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன்பேரில் வழக்கறிஞர்கள் சாலை மறியலை கைவிட்டு சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் இரண்டு காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.



    இந்த சம்பவம் குறித்து விசாரணைக்குப் பிறகு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: