ஆந்திராவில் பால் பண்ணையில் வாயுக்கசிவு - 25 பேர் மயக்கம்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பால் பண்ணையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 25 பேர் மயக்கமுற்று விழுந்தனர்.

ஆந்திராவில் பால் பண்ணையில் வாயுக்கசிவு - 25 பேர் மயக்கம்
மயக்கம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
  • News18
  • Last Updated: August 21, 2020, 10:16 AM IST
  • Share this:
ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டம் பூத்தலபட்டு அருகே உள்ள பண்டப்பள்ளியில் தனியார் பால் பதனிடும் தொழிற்சாலை செயல்படுகிறது. நேற்றிரவு 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென தொழிற்சாலையில் சிலிண்டர்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்த அமோனியா வாயு கசிந்தது. இதனால் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக சித்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தகவல் அறிந்து மருத்துவமனைக்கு சென்ற சித்தூர் மாவட்ட ஆட்சியர் பரத் குப்தா, டாக்டர்களிடம் சிகிச்சை பெறும் தொழிலாளர்களின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தார்.





மயக்கடைந்தோரில் இருவருக்கு தீவிர மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் வேலூர் சிஎம்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர்.
First published: August 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading