சோனியா குடும்பத்தை சந்தித்த பிரசாந்த் கிஷோர்: பாஜகவை வீழ்த்த பெரிய பிளான்?

prashant kishor, rahul gandhi

"மூன்றாவது அணி" என்பது ஒரு பயனற்ற பயிற்சி என்று கருதினாலும் - "மூன்றாவது அல்லது நான்காவது முன்னணி பாஜகவுக்கு சவால் விடும் என்று தான் நம்பவில்லை" என்று பிரசாந்த் கிஷோர் முன்பு கூறியிருந்தார்,

  • Share this:
பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேற்று டெல்லியில் அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசினார். 5 ஆண்டுகளுக்கு பின்னர் இருவருக்குமிடையே நடைபெற்ற இந்த சந்திப்பு அரசியல் வட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, இருவருக்குமிடையேயான இந்த சந்திப்பின் பின்னணி குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

பல தேர்தல்களில் கட்சிகளுக்காக வியூகங்கள் அமைத்து தந்து வெற்றிகரமான தேர்தல் வியூக நிபுணர் என பெயரெடுத்தவர் பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிஷோர். திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளுக்காக கடந்த சட்டமன்ற தேர்தல்களில் இவர் பணியாற்றியது நினைவிருக்கலாம்.

Also Read:  சிங்கப்பூரை தொடர்ந்து இந்தியாவின் BHIM-UPIஐ ஏற்ற 2வது நாடானது பூடான்!

டெல்லியில் ராகுல் காந்தி இல்லத்துக்கு திடீரென வருகை தந்த பிரசாந்த் கிஷோர் நேற்று அவரை சந்தித்து பேசியிருக்கிறார். இந்த மீட்டிங்கில் பஞ்சாபின் தேர்தல் பொறுப்பாளரும், உத்தரகண்டின் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். முதலில் இந்த சந்திப்பு, பஞ்சாப் மற்றும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பானது என சொல்லப்பட்டது.

எனினும் இந்த சந்திப்பின் போது ராகுல் காந்தி மட்டுமல்லாது சோனியா, பிரியங்கா என ஒட்டுமொத்த காந்தி குடும்பத்தையே பிரசாந்த் சந்தித்து பேசியிருப்பதாகவும், இது மாநில தேர்தல்கள் அல்லாது தேசிய அரசியல் குறித்தானது எனவும் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான பிளூ பிரிண்ட் தயாரிப்பது குறித்து இந்த பேச்சு இருந்ததாகவும் விவரம் அறிந்த வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

Also Read:   அவ்ளோ கண்டிப்பான பழங்குடியின கிராமத்துக்குள்ளேயே கொரோனா பரவியது எப்படி?: குழம்பும் அதிகாரிகள்!

கடைசியாக ராகுல் - பிரசாந்த் சந்திப்பானது 2017ல் நடைபெற்றது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் மீண்டும் சந்திக்கின்றனர். 2017-ல் காங்கிரஸ் கட்சிக்காக பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூக நிபுணராக பணியமர்த்தப்பட்டார். இருப்பினும் அவருடைய வியூகங்கள் எடுபடாமல் போனதால் இருவருக்கும் சங்கடம் ஏற்பட்டது.

மேலும், காங்கிரஸின் தன்னிச்சையான நடவடிக்கை இந்த முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றும் அப்போது கிஷோர் பேசியிருந்தார்.

சமீபத்திய மம்தா பானர்ஜியின் வெற்றியை தொடர்ந்து சரத் பவாரை, 3 முறை சந்தித்து பேசியிருந்தார் பிரசாந்த் கிஷோர், இதன் மூலம் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து கொண்டு செல்லும் பணியில் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாயின. இதன் மூலம் 2024-ல் காங்கிரஸ் அல்லாத பாஜகவுக்கு எதிரான 3வது அணி உருவாக்கப்படுவதாக கூறப்பட்டது. பின்னர் இந்த கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெறவேண்டும் என குரல்கள் எழுந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"மூன்றாவது அணி" என்பது ஒரு பயனற்ற பயிற்சி என்று கருதினாலும் - "மூன்றாவது அல்லது நான்காவது முன்னணி பாஜகவுக்கு சவால் விடும் என்று தான் நம்பவில்லை" என்று அவர் முன்பு கூறியிருந்தார், ஏனெனில் முன்னர் இது போன்ற முயற்சிகளில் பலன் கிடைக்கவில்லை என பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருந்தார்.
Published by:Arun
First published: