பகுதி நேர ஆசிரியர்களுக்கு 10,000 ரூபாயாக ஊதியம் உயர்வு - தமிழக அரசு

மாதிரிப் படம்

12483 பகுதி நேர பயிற்றுனர்களுக்கு நிபந்தனைகளுடன் இவர்களது மாத ஊதியம் ரூ.7700-லிருந்து ரூ.10000 ஆக அதிகரித்து வழங்கிட முடிவு செய்துள்ளது.

 • Last Updated :
 • Share this:
  வாரத்தில் மூன்று நாட்கள் முழுவதுமாக பகுதி நேர ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும் என்ற நிபந்தனையுடன் பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 7700 லிருந்து 10 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.

  இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில், அரசு பள்ளிகளில் கல்விசார் இணைச் செயல்பாடுகளை பயிற்றுவிக்கும் பொருட்டு தோற்றுவிக்கப்பட்ட 12483 பகுதி நேரப் பயிற்றுநர் பணியிடங்களில் தற்போது பணியில் உள்ள 12483 பகுதி நேர பயிற்றுனர்களுக்கு நிபந்தனைகளுடன் இவர்களது மாத ஊதியம் ரூ.7700-லிருந்து ரூ.10000 ஆக அதிகரித்து வழங்கிட முடிவு செய்துள்ளது.

  நிபந்தனைகள்

  தற்போது பணியில் உள்ள பகுதி நேரப் பயிற்றுனர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு மறுஓதுக்கீடு செய்து,இனிவரும் காலங்களில் வாரத்திற்கு மூன்று முழு நாட்கள் பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.

  பகுதி நேரப் பயிற்றுநர்கள் பணி புரியும் சார்ந்த பள்ள தலைமையாசிரியர்கள் வழங்கும் கால அட்டவணையின்படி இவர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு பயிற்றுவிக்க வேண்டும்

  இவர்களுக்கான வருகைப் பதிவேடு சார்ந்த தலைமையாசிரியரால் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.

  இவர்களின் ஊதியம் வருகை பதிவேட்டின்படி தலைமையாசிரியர் மூலமாகவே விடுவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
  Published by:Vijay R
  First published: