#BREAKING | நளினிக்கு 30 நாட்கள் பரோல் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

news18
Updated: July 5, 2019, 3:00 PM IST
#BREAKING | நளினிக்கு 30 நாட்கள் பரோல் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவு
நளினி
news18
Updated: July 5, 2019, 3:00 PM IST
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினிக்கு, ஒரு மாதம் பரோல் அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, மகள் திருமணத்துக்காக 6 மாத காலம் பரோல் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று இந்த மனு மீதான விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராகி வாதாடினார். மகளின் திருமணம், கோவில் பிராத்தனை என்று நிறைய கடமைகள் இருப்பதால் 6 மாதம் பரோல் வழங்க வேண்டும் என்று உருக்கமாக கோரிக்கை விடுத்தார்.


24 ஆண்டுகளாக நானும் என் கணவரும் சிறையில் உள்ளோம். எனது குழந்தை சிறையில்தான் பிறந்தது என்று நளினி கண்ணீர் மல்க பேசினார்.

6 மாத பரோலுக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. பேரறிவாளனுக்கு ஒருமாதமே பரோல் வழங்கப்பட்டது, 6 மாதம் வழங்க சட்டத்தில் இடமில்லை. ஒரு மாத பரோல் வழங்க தயார் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நளினி தங்க உள்ள இடங்களை ஆய்வு செய்ய கால அவகாசம் வேண்டும். உத்தரவாதம் கையெழுத்து போட உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு சார்பில் ஆஜரான கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் வாதிட்டார்.

Loading...

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நளினிக்கு ஒருமாத பரோல் வழங்கி உத்தரவிட்டார். மேலும், நளினி தங்க உள்ள இடம் குறித்து விசாரணை நடத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த முறை பரோலில் வந்தபோது ஒரு நாளுக்கு ரூ.16 ஆயிரம் ரூபாய் அரசுக்கு செலுத்தினேன் என்று நளினி தனது வாதத்தில் கூறியிருந்த நிலையில், தற்போது நளினியிடம் பாதுகாப்புக்கான செலவுகளை கேட்கக்கூடாது என்று அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

போலீசாரின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், மகள் திருமண வேலைகளை மட்டும் பார்க்கலாம் என்றும் நளினிக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

தொலைக்காட்சிகளுக்கு பேட்டி எதுவும் அளிக்க கூடாது, 24 மணி நேரமும் போலீசாரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்றும், 30 நாட்களுக்குப் பின் சரண்டர் ஆக வேண்டும் என்றும் நளினிக்கு உத்தரவிடப்பட்டது.

பரோலுக்காக போலீசார் கேட்கும் ஆவணங்களை ஒருவாரத்தில் அளிக்க வேண்டும் என்று நளினிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

First published: July 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...