காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனிய காந்தி தேர்வு!

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டம் நடைபெற்றது.

Vijay R | news18
Updated: June 1, 2019, 11:28 AM IST
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவராக சோனிய காந்தி தேர்வு!
காங்கிரஸ் எம்.பிக்கள் கூட்த்தில் சோனியா காந்தி
Vijay R | news18
Updated: June 1, 2019, 11:28 AM IST
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவராக சோனியாகாந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக காரியக் கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி அறிவித்தார்.

ஆனால், ராஜினாமாவை ஏற்க மறுத்த காரிய கமிட்டி உறுப்பினர்கள், கட்சியின் கட்டமைப்பை முழுவதுமாக மாற்றியமைக்க ராகுல் காந்திக்கு அதிகாரம் அளித்தனர்.


இந்நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், டெல்லியில் இன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற மைய மண்டபத்தில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற எம்.பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தி நாடாளுமன்ற குழு தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Also Watch

Loading...

First published: June 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...