பதவி விலகாதீங்க..! ராகுலுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

News18 Tamil
Updated: May 28, 2019, 2:54 PM IST
பதவி விலகாதீங்க..! ராகுலுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்
News18 Tamil
Updated: May 28, 2019, 2:54 PM IST
தேர்தலில் தோற்றாலும், மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள்.. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று ராகுல்காந்தியிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

மக்களவைத் தேர்தல் தோல்விக்கு பின் நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில், அந்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். ஆனால், ராகுலின் ராஜினாமாவை நிராகரித்த உறுப்பினர்கள், கட்சியில் மாற்றங்கள் கொண்டுவர ராகுலுக்கு முழு சுதந்திரம் வழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றினர்.

இதனிடையே, தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று 6 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இந்த சூழலில், ராகுல் தனது முடிவில் இருந்து பின்வாங்கவில்லை என கூறப்படுகிறது.


இந்நிலையில், இன்று ராகுலுடன் தொலைபேசியில்  பேசிய மு.க. ஸ்டாலின், தேர்தலில் தோற்றாலும், மக்களின் மனங்களை வென்றுள்ளீர்கள்.. காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்

 
First published: May 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...