புதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்

புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும் நிலையில், சிறப்பு கலால் வரி 25 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளதால், மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் இன்று மதுக்கடைகள் திறப்பு - உயர்த்தப்பட்ட புதிய விலைப்பட்டியல்
புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும் நிலையில், சிறப்பு கலால் வரி 25 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளதால், மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
  • Share this:
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் மே 20-ம் தேதி மதுக்கடைகள் திறக்கப்படும் என அறிவித்த முதலமைச்சர் நாராயணசாமி, அதற்கான கோப்புகளை துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு அனுப்பினார்.

சிறப்பு கலால் வரி விதிக்கப்படாததால் அதனை அவர் நிராகரித்தார். நீண்ட இழுபறிக்குப் பின் ஆளுநரின் ஒப்புதலுடன் மாஹே, ஏனாம் தவிர்த்து புதுச்சேரி, காரைக்காலில் இன்று மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. தனிமனித இடைவெளி உள்பட அனைத்து விதிகளையும் பின்பற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

சாராயத்திற்கு குறைந்தபட்சம் 20 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. மதுபானங்களுக்கான சிறப்பு கலால் வரி பிராண்ட் வாரியாக 25 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுபானங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.


விலை பட்டியல்

1. அதன்படி, 895 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஆன்டிகுய்ட்டி ப்ளூ ப்ரீமியம் விஸ்கி 1,240 ரூபாய்க்கு விலை உயர்ந்துள்ளது.

2. 775 ரூபாயாக இருந்த பகார்டி சிட்ரஸ் ரம், தற்போது 920 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.3. 113 ரூபாய்க்கு விற்கப்பட்ட புட்வெய்ஷர் பீரின் விலை 240 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

4. சேர்மன் ஃபைன் பிராந்தி 240 ரூபாயில் இருந்து 641 ரூபாயாக உயர்ந்துள்ளது.

5. கிங்ஃபிஷ்சர் ஸ்ட்ராங் பீர் 119 ரூபாயாக உயர்ந்தது

6. ஹண்டர் ப்ரீமியம் பீர் 130 ரூபாயாகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

7. MC வி.எஸ்.ஓ.பி. பிராந்தி 853 ரூபாயாக உயர்வு

8. MC ஓல்டு காஸ்க் ட்ரிபிள் எக்ஸ் ரம் 784 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.

9. லா மார்டின் ப்ரீமியம் பிராந்தி 530-ல் இருந்து 954 ரூபாயாக்கப்பட்டுள்ளது.

10. ஓல்டு அட்மிரல் பிராந்தி 250-ல் இருந்து 560 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

11. கூரியர் நெப்போலியன் பிரெஞ்சு பிராந்தி 720 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

12. இம்பீரியல் நெப்போலியன் பிரெஞ்சு பிராந்தி 300 ரூபாயில் இருந்து 856 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

13. க்ரிம்ப்சன் பிராந்தி 400-ல் இருந்து 852 ரூபாயாக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை குறைவு என்ற நிலை மாறி, கொரோனா காரணமாக தமிழகத்திற்கு இணையாகவும், அதைவிட அதிகமாகவும் மதுபானங்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Also see...
First published: May 25, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading