கேன்சல் செய்யப்படும் உணவுகளை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கும் ஸொமாட்டோ ஊழியர்

’ஃபீடிங் இந்தியா’ என்னும் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து கேன்சல் செய்யப்பட்ட உணவுகள், மீந்துபோன உணவுகளை வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார்.

news18
Updated: May 25, 2019, 2:58 PM IST
கேன்சல் செய்யப்படும் உணவுகளை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கும் ஸொமாட்டோ ஊழியர்
பதிக்ரித் சஹா
news18
Updated: May 25, 2019, 2:58 PM IST
உதவி செய்ய பணம் இருக்க வேண்டும் என்றில்லை மனம் இருந்தால் போதும் என்பதை உணர்த்துகிறது இந்த செய்தி.

கல்கத்தாவின் ’டம்டம்’ பகுதியைச் சேர்ந்த பதிக்ரித் சஹா என்பவர் மாநகர முனிசிபல் கார்பொரேஷனில் வேலை செய்து வந்துள்ளார்.

அப்போது வறுமையில் வாடும் ஏழைக் குழந்தைகளைக் கண்டு மிகவும் மனமுடைந்த பதிக்ரித் அவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்று முனைப்போடு இருந்துள்ளார். இதனால் அவர்களுக்காக முழு நேர சேவகனாக இருக்க வேண்டி தன்னுடைய வேலையையே ராஜினாமா செய்துள்ளார்.


இருப்பினும் வயிற்றுப் பிழைப்பிற்காக ஸொமாட்டோ உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் டெலிவரி எக்ஸிக்யூட்டிவாக வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு ஆர்டர் செய்யும் உணவுகளை வாடிக்கையாளர்கள் கேன்சல் செய்தால் அந்த ரெஸ்டாரண்டிற்கும் பணம் சென்றுவிடும்.

ஆனால், அந்த உணவுகள் பாழாகும். இல்லையெனில் உள்ளே வேலை செய்யும் பணியாட்கள், டெலிவரி பாய் ஆகியோர் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் பதிக்ரித்தின் இந்த செயலுக்காக அந்த உணவை விட்டுக் கொடுத்துவிடுகின்றனர்.

அவரும் ’ஃபீடிங் இந்தியா’ என்னும் தொண்டு நிறுவனத்தோடு இணைந்து கேன்சல் செய்யப்பட்ட உணவுகள், மீந்துபோன உணவுகளை வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு வழங்கி வருகிறார். மேலும் குழந்தைகள் காப்பகங்களுக்கும் உணவுகள் செல்கின்றன.

Loading...

அந்தக் குழந்தைகளும் அவரை செல்லமாக ’மாமா’ என்று அழைக்கின்றனர். மேலும் அவர் ’ஹெல்ப் அசோசியேஷன்’ என்னும் பெயரில் தொண்டு நிறுவனமும் நடத்தி வருகிறார். இதன் மூலம் வரும் பணத்தை வைத்து அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். அவர்களுக்குத் தேவையான உடைகளையும் வாங்கித் தருகிறார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 25, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...