HOME»NEWS»LIFESTYLE»zodiac signs who love the idea of marriage esr ghta

இந்த ராசிக்காரர் உங்க துணையா? சூப்பர் ஸ்பெஷல் குணத்தை இங்க செக் பண்ணி பாருங்க..

ஜாதக அடிப்படையில் பார்க்கும்போது ஒரு சில ராசிக்காரர்கள், தாங்கள் விரும்பியவரை கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள் என்னும் நம்பிக்கை உள்ளது.

இந்த ராசிக்காரர் உங்க துணையா? சூப்பர் ஸ்பெஷல் குணத்தை இங்க செக் பண்ணி பாருங்க..
மாதிரி படம்
  • Share this:

சரியான மனைவியோ, கணவனோ அமைந்துவிட்டால், அந்த வாழ்க்கை ஒரு வரம். இரு மனங்களும் ஒன்றி வாழும் இணையர்கள், தங்களது வாழ்வில் சந்திக்கும் அனைத்து பிரச்சனைகளையும் மிக எளிமையாக எதிர்கொள்வார்கள். அதனால், வாழ்க்கையில் சரியான நபரை தேர்தெடுக்கிறோமா என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். ஜாதக அடிப்படையில் பார்க்கும்போது ஒரு சில ராசிக்காரர்கள், தாங்கள் விரும்பியவரை கட்டாயம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்?

துலாம் (Libra)

துலாம் ராசிக்காரர்கள் தங்களுக்கு வரும் பார்ட்னர் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். மிகவும் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்ள விரும்பும் அவர்கள், எதிர்காலம் உள்ளிட்ட எந்த கவலையுமின்றி தனது கணவனோ / மனைவியோ இருக்க வேண்டும் என்றும் நினைப்பார்கள். துலாம் ராசிக்காரர்கள் எப்போதும் ரொமாண்டிக்காக இருப்பவர்கள். மேலும், வசீகரமும் உற்சாகமும் அவர்களிடம் நிறைந்திருக்கும்.



கடகம் (Cancer)

பெற்றோர்கள் அறிமுகப்படுத்தும் பெண்ணை திருமணம் செய்துகொள்ள விரும்புவார்கள். யாரிடமும் தேவையில்லாமல் பழகி நேரத்தை வீணடிக்கமாட்டார்கள். நிலையான வாழ்க்கையை வாழ விரும்பும் அவர்கள், திருமணத்துக்குப் பிறகும் அந்த வாழ்க்கை தொடர வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்கள். தனியாக இருப்பதைக் காட்டிலும் வாழ்க்கை துணை என்று இருந்தால் நல்லது என்று நினைப்பதனால், திருமணத்துக்கு விரைவில் ஒப்புக்கொள்வார்கள்.

உங்களை சுற்றி இருப்பவர்களே நம்பிக்கை துரோகம் செய்கிறார்களா..? அதை கடந்து செல்லும் பாதை இதோ...

மிதுனம் (Gemini)

திருமணத்தில் மிகுந்த ஆர்வமுடையவர்கள். யாரை கல்யாணம் செய்துகொள்கிறோம் என்பதெல்லாம் முக்கியமில்லை, ஆனால் விரைவாக திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள். இதனால், பெற்றோர் பார்க்கும் வரனுக்கும் ஒப்புக்கொள்வார்கள். எந்த ஒரு புது இடத்திலும் சீக்கிரம் ஐக்கியமாகக்கூடிய குணாதிசயம் அவர்களுக்கு இருப்பதால் புது இடங்களில் திருமணம் செய்து வைத்தாலும் கவலைப்பட மாட்டார்கள். மிதுன ராசிக்காரர்கள் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும்.



ரிஷபம் (Taurus)

பிடிவாத குணம் உடைய ரிஷப ராசிக்காரர்களுக்கு மனதில் திருமண எண்ணம் தோன்றிவிட்டால், தங்களுக்கானவர்களை கண்டுபிடிக்கும் வரை ஓயமாட்டார்கள். தான் விரும்பியவரை கரம் பிடிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால், ஆயிரம்பேர் சூழ்ந்திருந்தாலும் அவர்களை கடந்து சென்று தனக்கு பிடித்தவரை கரம் பிடிக்கும் குணமுடையவர்கள். நிலையான மற்றும் பாதுகாப்பான வாழ்க்கயை வாழ வேண்டும் என்று ரிஷப ராசிக்காரர்கள் விரும்புவதால், திருமணம் அவர்களின் முதல் தேர்வாக இருக்கும்.

விருச்சிகம் (Scorpio)

சிறுவயது முதலே தங்களுக்கானவர்களை தேடிக்கொண்டே இருப்பார்கள். எதிர்காலத்தில் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருப்பார்கள் என்பதால், அதற்குறிய வகையில் வாழ்க்கை துணையை தேர்த்தெடுப்பார்கள். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படக்கூடிய அவர்கள், தங்களுக்கானவர்களை கண்டுபிடித்துவிட்டால் உடனடியாக திருமணம் செய்து கொள்வார்கள்.

இந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது மட்டும்தான் குறியாக இருப்பார்களாம்..! அவர்கள் யார்  என தெரிந்துகொள்ள வேண்டுமா?



சிம்மம் (Leo)

மற்றவர்களைக் காட்டிலும் மிகவும் தனித்துவமாக செயல்படக்கூடிய சிம்ம ராசிக்காரர்கள், அவ்வளவு எளிதாக ஒருவர் மீது நம்பிக்கை வைத்துவிட மாட்டார்கள். மிகவும் நம்பிக்கையானவராகவும், உண்மையானவராகவும் இருப்பார் என்று யாரை நினைக்கிறார்களோ, அவர்களை மட்டுமே திருமணம் செய்து கொள்வார்கள். தன் வாழ்க்கை முழுவதும் உடனிருப்பார் என்று ஒருவரை அவர்கள் நினைத்துவிட்டால், உடனடியாக விரும்பியவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள்.

 

 
Published by:Sivaranjani E
First published: