• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது மட்டும்தான் குறியாக இருப்பார்களாம்..! அவர்கள் யார்  என தெரிந்துகொள்ள வேண்டுமா?

இந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது மட்டும்தான் குறியாக இருப்பார்களாம்..! அவர்கள் யார்  என தெரிந்துகொள்ள வேண்டுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

  • Share this:
    இன்றைய கொரோனா காலகட்டத்தில் பணம் என்பது மனிதர்கள் வாழ ஒரு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் ஜோதிடம் மூலமாக ஒரு மனிதனின் ராசியை வைத்து அவர் பண விஷயத்தில் எப்படி செயல்படுவார் என்பதை கணிக்க முடியும். பணம் என்பது உலகில் சக்தி மற்றும் இன்பத்தின் சாரமாக உள்ளது. ஆனால் அன்பைவிட, பணம் முக்கியமில்லை தான். மகிழ்வான அல்லது துக்க காலங்களில் ஒரு நபரை உண்மையிலேயே ஆதரிக்கக்கூடிய ஒரே உணர்வு அன்புதான்.

    உலகில் நீங்கள் விரும்பும் எதையும் பணத்தை கொண்டு வாங்குவதன் மூலம் பெறப்பட்ட மகிழ்ச்சியை விட ஒரு நபரின் ஆதரவும் அன்பும் உண்மையில் நமக்கு முக்கியம். பணத்தை எப்போது வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். ஆனால் அன்போ, அப்படியானது அல்ல. ஜோதிடர்கள் இத்தகைய குணாதிசயங்களை ராசிகளின் அடிப்படையில் அடையாளம் காண்கின்றனர். எனவே, பணத்தின் மீது வெறி கொள்ளும் ராசிக்காரர்களை இப்போது காண்போம். அதில் உங்கள் ராசி இருக்கின்றதா, என்று செக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்.

    ரிஷபம் (Taurus) :

    சுக்கிரன் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் பணத்தை ஈர்ப்பதில் கெட்டிக்காரர்கள். பணம்தான் குறிக்கோள், லட்சியம் என ஒடி ஓடி சம்பாதிப்பார்கள். இவர்கள் இருக்கும் இடத்தில் பணம் இருக்கும். பணம் இருக்கும் இடத்தில் இவர்கள் இருப்பார்கள். எத்தனை லட்சம் கடன் வாங்கினாலும் எளிதில் அடைத்து விடுவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் பணம் இருந்தால் பாதுகாப்பாக இருப்பதை உணர்வார்கள். மேலும், இது அவர்களது தன்னம்பிக்கையை அளிப்பதோடு, எதிர்பாராத நிதி பிரச்சனை வந்தாலும், அதைப் பற்றி கவலைப்படமாட்டார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு பணத்தை சேமிப்பது என்பது விருப்பமான ஒன்றாக இருக்கும். அதற்காக இவர்கள் தாராள மனம் கொண்டவர்கள் அல்ல. இந்த ரிஷப ராசிக்காரர்களிடம் பிரச்சனை என்று வந்தால், அவர்களுக்கு உதவ சற்றும் மறுக்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள். இந்த ராசிக்காரர்கள் செலவு என்று வரும் போது எப்போதும் பணத்தை, தங்கள் விருப்பமானவர்களிடம் இருந்துதான் வாங்கி செய்வர்.

    மீனம் (Pisces) :

    மீன ராசிக்காரர்கள் பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்காரர்கள். வீண் செலவு செய்ய மாட்டார்கள். யாரிடமும் எளிதில் கைமாற்றாக பணம் கடன் வாங்குவதில் சமர்த்தர்கள். மீன ராசிக்காரர்கள் பண விஷத்தை பொறுத்தவரை ஜாக்கிரதையாக இருப்பார்கள். பண விஷயத்தில் இவர்களின் போக்கு அமோகமாக இருக்கும். அதனால் சில நேரங்களில் இவர்களை மற்றவர்கள் தவறாக வழிநடத்தவும் வாய்ப்புள்ளதது.

    விருச்சிகம் (Scorpio) :

    விருச்சிக ராசிக்காரர்கள் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்க விரும்பமாட்டார்கள். இவர்களது ஆசையே வித்தியாசமாக இருக்கும் மற்றும் இவர்கள் தங்களது இலக்குகளை அடைய வேண்டுமென்ற உறுதியான தீர்மானம், இவர்களது பணத்தை சேமிக்க உதவும். இந்த விருச்சிக ராசிக்காரர்கள் யாரிடமாவது பணத்தைக் கேட்கும்போது, கொடுக்காமல் தவிர்த்தால், அதை இந்த விருச்சிக ராசிக்காரர்கள் மறக்கமாட்டார்கள். அடுத்த முறை இவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்தவர்கள் இவர்களிடம் பணம் கேட்டு வந்தால், மறக்காமல் அதைச் சொல்லிக் காட்ட தயங்கமாட்டார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் பணம் பண்ணுவதில் கெட்டிக்காரர்கள். பணத்தின் மீது பற்றும் நேசமும் கொண்ட இவர்கள் வியாபாரத்தில் கெட்டிக்காரர்கள். விருச்சிக ராசிக்கார்களிடம் பணம் இருக்கிறதா இல்லையா என்பது யாருக்கும் அவ்வளவு எளிதில் தெரியாது. பண விஷயத்தில் இவர்கள் எப்போதும் ரகசியம் காப்பார்கள். செய்யும் செலவுகளை குறித்துவைத்துக்கொள்ளும் பழக்கம் இவர்களில் சிலருக்கு உண்டு.



    மிதுனம் (Gemini):-

    தன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களும் பணம் எல்லாம் பெரிய விஷயமே இல்லை. இந்த மிதுன ராசிக்காரர்கள் அதிக பேராசை கொண்டவர்கள் இல்லாவிட்டாலும், இவர்கள் மிகவும் தந்திரமான விற்பனையாளர்களாக இருப்பர். இந்த மிதுன ராசிக்காரர்களது மார்கெட்டிங் திறமையால், அவர்கள எப்பேற்பட்ட மலிவான பொருட்களையும் தந்திரமாக விற்றுவிடுவார்கள். அதே சமயம் இந்த மிதுன ராசிக்காரர்களுக்கு பணத்தை எப்படி மற்றும் எங்கு முதலீடு செய்வது என்று தெரியாது. இதற்கு அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் விளைவுகளைப் பற்றி முன்பே சிந்திக்காமல் இருப்பதுதான்.

    துலாம் (Libra):-

    துலாம் ராசிக்காரர்கள் சௌகரியமான வாழ்க்கையை வாழ நிறைய பணம் தேவையாக இருக்கும். இவர்கள் ஆடம்பரமான, மற்றும் சௌகரியமான வாழ்க்கையை வாழ அதிக பணத்தையும் செலவு செய்வார்கள். துலாம் ராசிக்காரர்கள் சௌகரியமாக இருப்பதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்க தயங்கமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது பேராசைக் கொண்டவர்கள் அல்ல. இருப்பினும் இவர்கள் எப்போதும் சௌகரியமான வாழ்க்கையையே வாழ விரும்புவர். துலாம் ராசி நபர்கள் பணத்தை சம்பாதித்தாலும், சில நேரங்களில் பெரிய பெரிய தொகையை கூட சிலரிடம் ஏமார்ந்துவிடுவார்கள். பண விஷத்தை பொறுத்தவரை இவர்கள் அடுத்தவர்களிடம் ஆலோசனை செய்து முதலீடு செய்வதே நல்லது.

    பணத்தின் அருமையை புரியாதவர்கள் இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் நன்றாக புரிந்திருப்பார்கள். பணம் எல்லோராலும் சம்பாதிக்க முடியாது. அப்படியே சம்பாதித்தாலும் அதை சேர்த்து வைத்து பாதுகாக்க முடியாது. சில ராசிக்காரர்கள் மட்டுமே பணத்தை ஈர்க்கும் சக்தி படைத்தவர்கள். அந்த வகையில் மேலே பார்த்த ராசிக்கார்கள் பணத்தின் மீது அதிக பற்றுகொண்டவர்கள். உங்கள் ராசி அந்த லிஸ்டில் இருக்கிறதா... என்று செக் செய்து கொள்ளுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: