முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்த ராசிக்காரங்க சோஷியல் மீடியாக்களில் இந்த கேரக்டரில் இருக்காங்களாம்.. இதில் நீங்களும் இருக்கீங்களா?

இந்த ராசிக்காரங்க சோஷியல் மீடியாக்களில் இந்த கேரக்டரில் இருக்காங்களாம்.. இதில் நீங்களும் இருக்கீங்களா?

மாதிரி படம்

மாதிரி படம்

காலையில் தூங்கி எழுந்தவுடன் தங்கள் ஸ்மார்ட்போன்களை முதலில் சரிபார்க்கும் நபர்களா நீங்கள்? எவ்வளவு சமூக ஊடக அடிக்‌ஷன் இருக்கு உங்களுக்கு?

  • 2-MIN READ
  • Last Updated :

இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ஸ்னாப்சாட் (Instagram, Facebook, Snapchat) போன்ற பல சமூக ஊடக ஆப்ஸ்களுக்கு அடிமையாக இருப்பது சாதாரண விஷயமல்ல. தற்போதைய மில்லினியா, தொடர்ந்து மக்களை அவர்களின் ஸ்மார்ட்போன்களுடன் பின்னிப் பிணைத்துள்ளது. மேலும், காலையில் தூங்கி எழுந்தவுடன் தங்கள் ஸ்மார்ட்போன்களை முதலில் சரிபார்க்கும் நபர்களை சமூக ஊடகங்களின் நீண்ட நேர அடிமைகள் (Big-time addicts of social media) என்று அழைக்கலாம்.

சிலர் சமூக ஊடகங்களுக்கு அதிகமாக அடிமையாகி விடுகிறார்கள் இவர்களின் குறிப்பிட்ட ஆளுமைகளை, ஜோதிடர்கள் ஜோதிடத்தின் உதவியுடன் எளிதில் தீர்மானிக்கின்றனர். ஒருவரின் வாழ்க்கையில் நிகழும் ஏற்றத் தாழ்வுகள், ஆரோக்கியமான மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நம் கிரகங்களின் இயக்கத்தைப் பொறுத்தது. எப்போதும் சமூக ஊடங்களிலே வலம் வரும் நபர்கள் அவர்களின் எதிர்வரும் காலம் குறித்த அனைத்து தகவல்களையும் முன்கூட்டியே அறிய ஜோதிடர்கள் உதவுவார்கள். அந்த வகையில் எனவே, சமூக ஊடகங்களுக்கு அடிமையாக இருக்கும் சில ராசிக்காரர்களை பற்றி இங்கே காண்போம்.

சோசியல் மீடியாவில் தினசரி 2 மணி நேரம் செலவழிப்பது மனசோர்வுக்கு வழிவகுக்கும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

விருச்சிகம் (Scorpio) :

விருச்சிக ராசிக்காரர்கள் (Scorpio) அமைதியின் சொரூபமாக இருப்பார்கள், ஆனால் அவர்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் நுழைய சமூக ஊடக ஆப்ஸ்களை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்துவார்கள். மற்றவர்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிய அவர்கள் விரும்புகிறார்கள், மேலும் மற்றவர்களின் படங்களுக்கு கருத்து தெரிவிப்பார்கள் அல்லது அதற்கு லைக்குகளை அளிப்பார்கள். நீங்கள் ஒரு குறிப்பைக் கூட பெறாமல், உங்களைப் பற்றிய ஒவ்வொரு சிறிய விவரத்தையும் அவர்கள் தோண்டி எடுப்பார்கள். இதனால் வாழ்க்கையின் உண்மையான தத்துவத்தைப் பற்றி அறியவும் பலவகை அறிந்திராத கேள்விகளுக்கு பதில் தேடவும் அவர்களை ஊக்குவிக்கிறது.

சிம்மம் (Leo):-

சிம்ம ராசிக்காரர்கள் (Leo) எப்போதும் பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்து கொள்ளவார்கள். எனவே, ஒரு சமூக ஊடக நட்சத்திரமாக இருப்பது அவர்களுக்கு ஒரு கேக் துண்டு போலத்தான். நம்பிக்கையையும், மகிழ்ச்சியான தருணத்தை பரப்பும் படங்களைப் பகிர்வதை அவர்கள் விரும்புகிறார்கள். இவர்களை பலரும் பின்தொடர்வார்கள், இதனால், சிம்ம ராசிக்காரர்கள் (Leo) சமூக ஊடகங்களில் தங்கள் ஆளுமையை நிலைநாட்ட நீண்ட நேரம் செலவழிக்கின்றனர். சிலநாட்களில் இவர்களுக்கு 24 மணி நேரம் கூட போதாது.

மிதுனம் (Gemini):-

மிதுன ராசிக்காரர்கள் தூங்கி எழுந்ததும் நரியின் முகத்தில் விழிக்கிறார்களோ இல்லையோ போனில் விழிப்பார்கள். காலையில் தங்கள் போன்களை சரிபார்த்துவிட்டு தான் மற்ற வேலைகளை தொடங்குவார்கள். அவர்கள் தான் உண்மையான சமூக உயிரினங்கள் (social creatures) என்று நினைப்பார்கள், இந்த ஊடகத்தின் மூலம், தங்கள் சுவைகளையும் விருப்பங்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். அவர்கள் சமூக உரையாடல்களில் ஈடுபட எப்போதும் விரும்புகிறார்கள், மேலும் அவர்கள் ஆர்வமுள்ள விஷயங்களைப் பற்றி பேச விரும்புகிறார்கள், அது ஒருவருடன் பேசுவதாக இருக்கலாம் அல்லது சாட் ரூம்களில் (Chat Room) அட்டகாசம் அடிக்கலாம்.

துலாம் (Libra):-

இந்த துலா ராசிக்காரர்கள் (Libra) தொழில்நுட்ப ஆர்வலர்களாக உள்ளனர், மேலும் அவர்களின் சமூக ஊடக தளத்தை தங்கள் நன்மைக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்பது அவர்களுக்குத் நன்றாக தெரியும். அவர்கள் சிறந்த பின்தொடர்தல் திறன்களைக் கொண்டுள்ளனர், இந்த துலா ராசிக்காரர்கள் (Libra) தங்கள் முன்னாள் நண்பர்களைப் பார்க்க வேண்டும் என்றால் அவர்கள் சமூக ஊடக தளத்தை பயன்படுத்துவார்கள். சோசியல் மீடியாவில் துலா ராசிக்காரர்கள் (Libra) அதிக நேரம் செலவழித்தால், தங்கள் நண்பர்களை இழக்கக்கூடும், எனவே அவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி நீண்ட நேரம் ஆக்ட்டிவாக இருந்து பல முகம் தெரியாத நண்பர்களை பின்தொடரப் பயன்படுத்துகிறார்கள். பேச்சு, செயலில் கவனம் தேவை. வீண் பேச்சு தவிர்த்தலும், வாக்குறுதி கொடுத்தலை தவிர்ப்பதால் பல இன்னல்களிலிருந்து தப்பிக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக சோசியல் மீடியாக்களில் வீண் சண்டையை விலை குடுத்து வாங்க வேண்டாம்.

இந்த ராசிக்காரர்கள் பணத்தின் மீது மட்டும்தான் குறியாக இருப்பார்களாம்..! அவர்கள் யார்  என தெரிந்துகொள்ள வேண்டுமா?

தனுசு (Sagittarius):-

தனுசு ராசிக்காரர்கள் சமூக ஊடகங்களை வேடிக்கைக்காக மட்டுமே பயன்படுத்துகிறார்கள். புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை சாதாரணமாக இடுகையிடுவது போல் இடுகிறார்கள் இவர்களுக்கென்று எந்தவொரு குறிக்கோளும் கிடையாது. இருந்தும், அவர்கள் சோசியல் மீடியாக்களில் அவ்வாறு செய்கிறார்கள், தங்களைப் பின்பற்றுபவர்களிடமிருந்து பாசிட்டிவான பதில்களைப் மட்டுமே பெறவேண்டும் என நினைப்பார்கள். ஊடகங்களில் உள்ள யாருடனும் உரையாடலில் ஈடுபடுவது அவர்கள்தான், எனவே அது அவர்களுக்கு சிரமமின்றி இருக்கிறது. இதயத்தில் நம்பிக்கையும், இயற்கையிலே வீரச் செயல்களைச் செய்யும் குணம் படைத்தவர்களாக இருக்கக் கூடியவர்கள் தனுசு ராசிகாரர்கள். அவர்களிடம் எண்ணற்ற ஆற்றலும், ஆர்வமும் நிறைந்திருக்கும்.

First published:

Tags: Rasi Palan, Social media