Home /News /lifestyle /

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள, உங்கள் ஸ்மார்ட்போன் போதும்!

நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்து கொள்ள, உங்கள் ஸ்மார்ட்போன் போதும்!

Smart phone

Smart phone

ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதும், அதை நீங்கள் பயன்படுத்தும் விதமும் உங்கள் குணாதிசயத்தைப் பற்றி நிறைய கூறுகிறது.

    ஒருவரின் குணாதிசியம் எப்படி மற்றவர்களால் புரிந்து கொள்ளப்படுகிறது என்பதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை சுலபமாகத் தெரிந்து கொள்ளலாம்.

    01. உங்கள் குணாதிசயம் எப்படி இருக்கிறது

    சூழ்நிலைகள், விஷயங்கள் மற்றும் பிற மனிதர்களை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதே, நமது குணாதிசயத்தை வடிவமைக்கும் முக்கிய காரணிகள் ஆகும். நாம் நமது உடல் தோரணையை எப்படி வைத்திருக்கிறோம் என்பதும் இங்கே முக்கியம் தான், அதில் நாம் ஒரு ஸ்மார்ட்போனை கையில் எப்படி பிடித்திருக்கிறோம் / வைத்திருக்கிறோம் என்பதும் அடங்கும். ஆம் நீங்கள் சரியாகத்தான் படித்தீர்கள்! ஸ்மார்ட்ஃபோனை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்பதும், அதை நீங்கள் பயன்படுத்தும் விதமும் உங்கள் குணாதிசயத்தைப் பற்றி நிறைய கூறுகிறது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் விதத்திற்கு ஏற்ப உங்கள் குணாதிசயம் எப்படி இருக்கும் என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.

    02. ஒரு கையால் போனை பிடித்துக்கொண்டு மறுகையில் கட்டை விரல் கொண்டு ஸ்க்ரோல் செய்வது

    நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை இப்படி வைத்திருந்தால், நீங்கள் ஒரு புத்திசாலித்தனமான, நியாயமான மற்றும் விவேகமுள்ள ஒரு நபர். நீங்கள் எப்போதுமே நன்றாக ஆராய்ந்து பின்னரே எந்த நடவடிக்கையையும் எடுப்பீர்கள். அதாவது நீங்கள் எப்போதுமே எச்சரிக்கையாக இருப்பீர்கள். மேலும் நீங்கள் எல்லா சூழ்நிலைகளையும் ஏற்கனவே யோசித்து வைத்து இருப்பதால் மற்றவர்கள் உங்களை ஏமாற்றுவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. ஆனால், காதல் என்று வரும்போது உங்களின் பெரிய குறை வெளி வருகிறது.காதல் விடயத்தில், நீங்கள் யோசிக்காமல் விரைவான முடிவுகளை எடுப்பதால், உங்களின் முடிவுகள் தவறாகும். நீங்கள் உங்கள் துணையை கணித்துக்கொண்டே இருக்க முனைவீர்கள், அது எல்லாவற்றையும் நாசமாக்கும்.

    Also read:  உங்க சிறுநீரை குடிங்க கொரோனா சரியாகிவிடும்.. தடுப்பூசி எதிர்ப்பாளரின் அதிர வைக்கும் பதிவு!

    03. ஸ்மார்ட்போனை இயக்க இரு கைகளையும் பயன்படுத்துதல்!

    உங்கள் ஸ்மார்ட்போனை நீங்கள் இப்படித்தான் கையாளுகிறீர்கள் என்றால், வேகம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் திறமையானவர், விரைவான முடிவெடுப்பதிலும் சிறந்தவர். வேகமாக மாறிவரும் சூழலுக்குத் தகவமைத்துக் கொள்வது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்சினையே அல்ல. இதன் விளைவாக புதிய சூழ்நிலைகளிலும் கூட உங்களால் திறம்பட செயல்பட முடியும். இருப்பினும், காதல் விஷயங்களில், உங்களின் எந்த திறமையும் செயல்படாது. உங்களின் உறுதியான குணாதிசியத்தின் காரணமாக, உங்களுடன் இருக்கும் நபருடன் நெருங்கிப் பழகுவதில் நீங்கள் சொதப்புவீர்கள். இது அவரையோ / அவளையோ அச்சத்தை உண்டாக்கி, உங்களிடம் இருந்து விலக்கும்.

    04.ஸ்மார்ட்போனை ஒரு கையில் பிடித்து கட்டை விரலால் ஸ்க்ரோலிங் செய்தல்!

    நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனை இப்படி பயன்படுத்தும் ஒரு நபராக இருந்தால், உங்கள் நம்பிக்கையின் அளவு ஆச்சரியமூட்டும் விதமாக இருக்கும்! சவால்களை கையில் எடுப்பது உங்களை எப்போதுமே பயமுறுத்தாது; இன்னும் சொல்லப்போனால் அதை நீங்கள் அவசர அவசரமாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் அனைத்தையும் புத்திசாலித்தனமாக செய்வீர்கள், அது வெற்றிகளைப் பெற உங்களுக்கு உதவுகிறது. ஆனால் காதல் என்று வரும்போது, மிகவும் ஆழமாக செல்லும் முன், உங்கள் துணையைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள நீங்கள் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்புவீர்கள். சில நேரங்களில் இது, நீங்கள் ஒரு கூச்சமுள்ள அல்லது மனம் விட்டு பேசாத ஒரு நபர் என்று முத்திரை குத்தப்பட வழிவகுக்கிறது.

    Also read:  விமான நிலையத்தின் தண்ணீர் சப்ளையை துண்டித்து ஆளும் கட்சி எம்.எல்.ஏவின் மகன் அடாவடி!

    05. ஒரு கையின் ஆள்காட்டி விரலை கீழே ஸ்க்ரோல் செய்யவும், மற்றொன்று ஸ்மார்ட்போனைப் பிடிக்கவும் பயன்படுத்துதல்!

    நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அடிக்கடி பல சிறந்த மற்றும் ஆக்கப்பூர்வமான யோசனைகள் செயல்படுத்தும் பழக்கத்தினை கொண்டவர்கள். நீங்கள் தனிமையை விரும்புகிறீர்கள், அது உங்களின் எல்லா வகையான எண்ணங்களை திசைதிருப்பவும். ஒரு தலைசிறந்த படைப்பினை உருவாக்கவும் உங்களுக்கு உதவுகிறது. உங்கள் காதல் வாழ்க்கையை பொறுத்தவரை, நீங்கள் அதிகம் வெட்கப்படுவீர்கள், இது புதியவர்களுடன் பிணைப்புகளை உருவாக்குவதில் சிக்கலை உண்டாக்குகிறது. அதே சமயம் யாராவது உங்களை பற்றி தெரிந்துகொள்ள முயற்சிக்கும்போது, அவர் ​​உங்களின் குணாதசியத்தால் வியந்து போவார்கள்.
    Published by:Arun
    First published:

    Tags: Smart Phone

    அடுத்த செய்தி