இன்றைய தலைமுறைகளிடம் மொபைல் மற்றும் TV பயன்படுத்துவது அதிகமாக உள்ளது. சில குழந்தைகள் கையில் மொபைல் போனை கொடுத்தால் மட்டும்தான் சாப்பிடவே ஆரமிக்கிறார்கள். இல்லையெனில், அலுத்து அடம்பிடிக்கிறார்கள்.
குழந்தை அழுகையை நிறுத்த, பெற்றோர்கள் குழந்தைகளின் கையில் செல்போனை கொடுக்கிறார்கள். இந்த போக்கு அனைவரின் வீட்டிலும் சகஜமாகிவிட்டது. இதனால் குழந்தைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா?.
சமீபத்திய ஆய்வின்படி, குழந்தைகளை அதிகமாக டிவி அல்லது ஃபோன்கள் அல்லது டேப்லெட்களைப் பார்க்க அனுமதிப்பது அவர்களின் கல்வித் திறனை பாதிப்பதாக கூறப்பட்டுள்ளது.
JAMA Pediatrics இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், குழந்தைப் பருவத்தில் தொழில்நுட்ப சாதனங்களில் அதிகமான நேரத்தை செலவிடுவது, அவர்களின் கல்வி சாதனையை பிற்காலத்தில் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.
ஹார்வர்ட் பல்கலைக்கழக மையத்தின் தகவல்படி, நிர்வாகச் செயல்பாடுகள் என்பது மன செயல்முறைகள் ஆகும். இது, திட்டமிடவும், ஒரு விஷயத்தில் கவனம் செலுத்தவும், அறிவுறுத்தல்களை நினைவில் கொள்ளவும், பல பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கவும் உதவுகிறது.
மேலும் இவை, உணர்ச்சி கட்டுப்பாடு, கற்றல், கல்வி சாதனை மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முக்கியம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை சமூக ரீதியாக, கல்வி ரீதியாக, தொழில் ரீதியாக மற்றும் நம்மை நாமே எவ்வாறு கவனித்துக்கொள்கிறோம் என்பதில் நமது வெற்றியைப் பாதிக்கிறது என டாக்டர். எரிகா சியாப்பினி கூறுகிறார்.
ஆய்வு என்ன கூறுகிறது?
ஆய்வில், மூளையில் உள்ள அறிவாற்றல் செயல்பாடுகளின் நரம்பியல் பாதைகளை பற்றி அறிய 1 முதல் 18 மாதங்கள் மற்றும் 9 வயது வரையிலான 437 குழந்தைகள் எலக்ட்ரோஎன்செபலோகிராபி (EEG) ஸ்கேன்களுக்கு உட்படுத்தப்பட்டனர். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தையும் திரையில் செலவிடும் நேரத்தையும் பெற்றோரிடம் இருந்து சேகரித்தனர்.
Also Read : பெற்றோர்கள் கவனத்திற்கு... உங்கள் குழந்தைளுக்கு பற்சிதைவா..? தடுக்க இவற்றை செய்யுங்கள்!
1 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தையின் திரை நேரம், கவனம் செலுத்துதல் மற்றும் 9 வயது குழந்தையின் நிர்வாக செயல்பாடு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தொழிநுட்ப சாதனங்கள் குழந்தையின் வளர்ச்சியை தடுக்கும்:
அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் தகவல் படி, குழந்தைகள் மொபைல் அல்லது திரை பயன்பாட்டிலிருந்து அதிகம் கற்றுக் கொள்வதில்லை. குழந்தைகளுக்கு இரு பரிமாணங்களில் வழங்கப்படும் தகவல்களை விளக்குவதில் சிரமம் உள்ளது. உதாரணமாக, கற்பனையை யதார்த்தத்திலிருந்தும் திரையில் இருந்தும் பிரிப்பது கடினம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.
நீங்கள் வீட்டு வேலைகளில் மிகவும் பிஸியாக இருப்பதால், குழந்தையை டிவியின் முன் உட்கார வைப்பது அல்லது மொபைலைக் கொடுப்பது உங்கள் வேலையைத் தொந்தரவு செய்யாதபடி எளிதாகக் காணலாம். ஆனால், இது உங்கள் குழந்தையின் கற்பனை திறனை குறைக்கும். எனவே, அவர்களை வீட்டில் உள்ள பெரியவர்களுடன் பழக விடுங்கள். இதன் மூலம் அவர்கள் பல்வேறு விஷயங்களை எளிதாக கற்றுக்கொள்வார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child Care, Health Benefits