உங்கள் குழந்தைகளை இந்த முறையில் கண்டிப்பதுதான் அவர்களை நல்வழிப்படுத்தும்.. ஆய்வில் தகவல்..

நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் சில மணி நேரமாவது குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடன் அமர்ந்து அன்றைய தினத்தை டிஸ்கஸ் செய்யலாம்.

நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் சில மணி நேரமாவது குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடன் அமர்ந்து அன்றைய தினத்தை டிஸ்கஸ் செய்யலாம்.

  • Share this:
உங்கள் பசங்க அதிகமாக சேட்டை செய்றாங்களா?அப்படியானால், நிலைமையை அவர்களுக்கு அமைதியாக விளக்க முயற்சிப்பது முக்கியம். ஏனென்றால், 'நேர்மறையான ஒழுக்கம்' என்பது ஒரு உரையாடலுடன் தொடங்குகிறது என்றாலும், ஒரு புதிய உலகளாவிய ஆய்வு, நீங்க பசங்க கிட்ட பயன்படுத்துற டோனும், மொழியும் (tone and language) முக்கியம் என்கிறது. பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அன்பாக நடந்துகொள்வது மிகக்குறைவு. ஏனெனில் அவர்களின் சேட்டை பல நேரங்களில் பெற்றோர்களை இன்னலுக்கு உள்ளாக்கும். 

உங்கள் பிள்ளை, கிளாஸ்மேட்டின் பென்சில், ரப்பர், போன்ற பொருட்களை திருடிவிட்டாலோ அல்லது உங்கள் பிள்ளையின் உடன்பிறந்தவர்களோடு சண்டையிட்டாலோ பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ட்ரீட் செய்யும் விதமே வேறு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஒழுங்கு அணுகுமுறைகள் ஒவ்வொரு பெற்றோருக்கும் மாறுபடும். மிச்சிகன் பல்கலைக்கழகத்தை (University of Michigan) சேர்ந்த அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய ஆய்வின் மூலம் விசாரிக்கத் திட்டமிட்டது மேலே நாம் கூறியதைப் பற்றித்தான். 

குழந்தைகளின் நடத்தையுடன் தொடர்புடைய பல்வேறு வகையான தாக்கத்தை மதிப்பிடுவதற்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் (United Nations Children's Fund (UNICEF)) தரவுத்தளத்தில் பல ஆய்வுகளின் தரவை அவர்கள் அனலைஸ் செய்தனர். குழந்தைகளின் சேட்டைகளால் பிறரிடமிருந்து கிடைக்கும், அடி-உதை மற்றும் பிற வகையான உடல் தண்டனைகள் குறித்தும் (இப்போது பல நாடுகளில் தடைசெய்யப்பட்டுள்ளது), ஆய்வு பேசுகின்றது. மேலும் அவை பல நாடுகளிலும் குழந்தைகளுக்கு சிக்கல்களை ஏற்படுகிறது என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

பெற்றோரின், வாய்மொழி மூலம் தவறை உணர்ந்த குழந்தைகள் தங்கள் சகாக்களுடன் மிகவும் நேசமானவர்களாக இருக்கிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இருப்பினும், சிலர் மற்றவர்களுடன் பழகுவதில்லை. இருப்பினும் இதில் சிலர் உடல் ரீதியான தண்டனை இல்லாத நிலையில் கூட அதிக அளவு ஆக்கிரோஷத்தை காட்டுகிறார்கள்."பெற்றோர்கள் கடுமையான டோனையும் மொழியையும் பயன்படுத்திய சந்தர்ப்பங்களில்," குழந்தைகளின் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. மிகவும் சொற்ப எண்ணிக்கையிலான குழந்தைகளே செய்த தவறை மீண்டும் செய்தால் அடி விழும் என்று பயப்படுகின்றனர். 

ஆனால் பல குழந்தைகள் உடலளவிலும் மனதளவிலும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். இதுபோன்ற தருணங்களில் அந்த குழந்தையுடன் உரையாடலை மேற்கொள்வது மட்டும் போதாது, நீங்கள் அவர்களிடம் பேசும் டோனை மாற்ற வேண்டும், மேலும் உளவியல் வன்முறையில் (psychological violence) குழந்தைகள் சிக்கிக்கொள்ளாமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்கள் குழந்தையை கண்டிக்கும் கேள்வியாக இருந்தாலும் கூட, அதை சிறு புன்னகையுடன் மிகவும் நேர்மையான முறையில் இருப்பது முக்கியம்.

கோபத்தை உடனடியாக கட்டுப்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான். அதற்காக கோபம் கண்ணை மறைக்கும் அளவிற்கு குழந்தைகளுடன் நடந்துகொள்வது உண்மையில் அபத்தமானது. குழந்தைகளை பூப்போல் நடத்த பழகிக்கொள்ளுங்கள். அவர்களிடம் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேளுங்கள். அவர்கள் ஏதேனும் தவறு செய்தால் அதை மீண்டும் செய்யாமல் இருப்பதற்கான வழியையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியம். 

நீங்கள் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தினமும் சில மணி நேரமாவது குழந்தைகளின் வளர்ச்சியில் கவனம் செலுத்துங்கள். அவர்களுடன் அமர்ந்து அன்றைய தினத்தை டிஸ்கஸ் செய்யலாம். அவர்களுடன் அமர்ந்து பாட்டு பாடுவது, விளையாடுவது போன்ற சிறுசிறு வேலைகளை செய்து அவர்களை நேர்மையான வழியில் சிந்திக்கவும், நடக்கவும் கற்றுக் கொடுங்கலாம். மேற்சொன்னவற்றை செய்தாலே போதும், குழந்தைகள் அவர்கள் செய்த தவறை தவறிலிருந்து சரியான பாடத்தை கற்றுக் கொண்டு அதை மீண்டும் செய்ய மாட்டார்கள்.
Published by:Ram Sankar
First published: