தொடங்கிய இடத்தில் இருந்து மீண்டும் ஒரு தொடக்கம் என்பது போல சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை என்ன செய்ய காத்திருக்கோ என்று அல்லல் பட வைத்த நவம்பர் மாத கொரோனா செய்திகளை இந்தத் தொகுப்பில் பார்க்க இருக்கிறோம்.
நவம்பர் 3: ஒரு ஆய்வின்படி, தாய்மார்கள் COVID-19 வைரஸால் பாதிக்கப்பட்டால், தாய்மார்களை விட குழந்தைகளுக்கு குறைவாகவே பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டது.
நவம்பர் 4: இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் நோய் தொற்று எண்ணிக்கை என்பது இரண்டு இலக்கங்களாக குறைந்தது. நாட்டின் மொத்த ஒரு நாள் தொற்று எண்ணிக்கை என்பது 1000க்கும் குறைவாக சரிந்தது.
நவம்பர் 7 பெய்ஜிங் அதன் கோவிட்-19 தடுப்புக் கொள்கை செயல்படும் விதத்தை மேம்படுத்தி, சீனத் தலைநகரை விட்டுச் செல்வதையும், திரும்புவதையும் எளிதாக்கும், மேலும் மருத்துவமனை சோதனை மற்றும் முக்கியமான வணிகப் பயணங்கள் போன்ற நகரத்திற்கு அவசர வருகைகளுக்கு உதவி வழங்கும் என்று அரசாங்க செய்தித் தொடர்பாளர் சூ ஹெஜியன் கூறினார்.
நவம்பர் 8 அமெரிக்காவின் பால்டிமோர், மேரிலாண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கோவிட்-19 க்கு காரணமான வைரஸ் SARS-CoV-2 இல் உள்ள ஒரு குறிப்பிட்ட புரதம் இதய திசுக்களை எவ்வாறு சேதப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். பின்னர் அவர்கள் 2DG என்ற மருந்தைப் பயன்படுத்தி, அந்த புரதத்தின் நச்சு விளைவுகளை இதயத்தில் மாற்றியமைத்தனர்.
நவம்பர் 8 : தொற்றுநோய் காரணமாக இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு 10 நாட்கள் நீடிக்கும் வருடாந்திர ஜிரி மேளா நடைபெற்றது. பாபா ஜிட்டூ கோவிலில் ஆசீர்வாதம் பெற நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
நவம்பர் 9 சீனாவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்த நிலையில் ஒரேநாளில் 9,005 புதிய கோவிட் தொற்றுகளை பதிவு செய்தது.
நவம்பர் 13: ஐரோப்பிய நாடுகளில் தோற்று பரவல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது. பிரான்ஸ் போன்ற நாடுகளில் அடுத்த அலை வருமோ என்ற பயம் எழுந்தது.
நவம்பர் 16 : ஜப்பானில் தினசரி பாதிப்பில் 1 லட்சத்தைத் தாண்டிய கொரோனா வைரஸ் எண்ணிக்கை தொற்றுநோயின் எட்டாவது அலைக்குள் நுழைந்ததாக அறிவித்தது.
நவம்பர் 18 புதிய கோவிட் -19 தொற்றுகள் சீனாவைத் தாக்கியதால் பெய்ஜிங் அரை ஊரடங்கு நிலையை பிரகடனப்படுத்தியது.
நவம்பர் 20 தொற்று பரவல் அதிகரிப்பால் பெய்ஜிங் மாகாணத்தின் பல பள்ளிகள் மூடப்பட்டன. அதே போல் அதை சுற்றி உள்ள மாகாணங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நவம்பர் 24: கோவிட் 19 க்கான கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்காக பாரத் பயோடெக் இன் இன்ட்ராநேசல் 'ஃபைவ் ஆர்ம்ஸ்' பூஸ்டர் டோஸுக்கு இந்தியாவின் மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் (டிசிஜிஐ) ஒப்புதல் அளித்தார்.
நவம்பர் 30: பொது மக்கள் எதிர்ப்புகளுக்குப் பிறகு பல நகரங்களில் சீனா தனது கடுமையான பூஜ்ஜிய-கோவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது மற்றும் நாடு முழுவதும் பாதுகாப்பை முடுக்கிவிட்டுள்ளது.
இந்தியாவை பொருந்தவரை நவம்பர் இறுதியில் மொத்த நோய் தொற்றின் எண்ணிக்கை 4.46 கோடி ஆக மாறியிருப்பினும் சிகிச்சை பெரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெறும் 3,653 ஆக இருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: China, Corona, Covid-19, YearEnder 2022