ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நினைவுகள் 2022- சார் தம் யாத்திரை பரவல் முதல் கனிம அறக்கட்டளை நிதி ஒதுக்கீடு வரை மே மாத கொரோனா செய்திகளின் தொகுப்பு

நினைவுகள் 2022- சார் தம் யாத்திரை பரவல் முதல் கனிம அறக்கட்டளை நிதி ஒதுக்கீடு வரை மே மாத கொரோனா செய்திகளின் தொகுப்பு

மே மாத கொரோனா செய்திகள்

மே மாத கொரோனா செய்திகள்

நினைவுகள் 2022- சார் தம் யாத்திரை பரவல் முதல் மே மாத கொரோனா செய்திகளின் தொகுப்பு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

கூட்டங்கள், திருவிழாக்கள் ஆகியவற்றிற்கு முதல் முறையாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மே மாதம் தொற்றின் எண்ணிக்கை என்பது அதிகம் குறைந்தது. அதேநேரம்  இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குறைந்து வந்த தினசரி தொற்று எண்ணிக்கை என்பது மே மாதத்தில் அதிகரித்தது. கொளுத்தும் வெயிலோடு மே மாதம் கொரோனா நம்மை வைத்து செய்த சம்பவங்களின் தொகுப்பை பார்க்கலாம்.

மே 01, 2022 : அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் கோவிட்-இல்லாத இடமாக மாறியது

2 மே 2022 :  இந்தியாவில் மொத்தமாக பதிவு செய்யப்பட்ட புதிய தொற்றுகளில் 47.04% டெல்லியில் மட்டுமே இருந்துள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 1,485 வழக்குகளும், ஹரியானாவில் 479 வழக்குகளும், கேரளாவில் 314 வழக்குகளும், உத்தரபிரதேசத்தில் 268 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 169 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

மே 3,2022 :  இந்தியாவின் கோவிட் பாசிட்டிவ் விகிதம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் 1% கடந்தது

மே 3, அன்று நடந்த சார் தம் யாத்திரையை அடுத்து உத்தரகாண்ட் மாநிலம் மற்றும் அதற்கு வருகை தந்த மக்களின் மற்ற மாநிலங்களிலும் தொற்று எண்ணிக்கை சரசரவென உயர்ந்தது.

10 மே, 2022 : ஃபைசர்/பயோஎன்டெக் அல்லது மாடர்னா தடுப்பூசியின் நான்காவது டோஸ் பொதுவாக கோவிட்-19லிருந்து அதிக பாதுகாப்பை வழங்குகிறது என்று ஆய்வு தெரிவித்தது.

12 மே ,2022 : வட கொரியா தலைநகர் பியாங்யாங்கில் தனது முதல் கோவிட் -19 தொற்றைக் கண்டறிந்த பின்னர் தேசிய அளவிலான ஊரடங்கை அமல்படுத்தியது.

மே 12, 2022 : 'பூஸ்டர் டோஸுக்கு 9 மாத இடைவெளி' விதி வெளிநாடுகளில் பயணிப்பவர்களுக்கு 6 மாதமாக தளர்த்தப்பட்டது.

மே 16 : குழந்தைகள் அரிதாகவே SARS-CoV-2 வைரஸால் கடுமையாக நோய்வாய்ப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு கண்டறிந்தது.

மே 16 : Biological E's நிறுவனத்தின் Corbevax விலை தனியார் மையங்களுக்கு ஒரு டோஸுக்கு ₹ 840 இல் இருந்து ₹ 250 ஆக குறைக்கப்பட்டது.

மே 19 : அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் குழுவின் முன்முயற்சியின் கீழ் இந்தியா கம்போடியா மற்றும் தாய்லாந்திற்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்கியது.

சீனாவின் CanSinoBIO Covid-19 தடுப்பூசியை WHO அங்கீகரித்துள்ளது

மே 20: INSACOG ஆனது இந்தியாவின் முதல் Omicron துணைதிரிபு  BA.4 ஐ ஹைதராபாத்தில் கண்டறியப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

மே 21 :ஓமிக்ரான் பிஏ.4 மாறுபாட்டின் முதல் தொற்று தமிழ்நாட்டில் பதிவானது

மே 22: இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) அதன் கோவிட்-19 தடுப்பூசியான Covovax இன் பாதுகாப்பு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை இரண்டு முதல் 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஊக்கமளிக்கும் அளவாக மதிப்பிடுவதற்கான கட்டம்-3 சோதனையை நடத்துவதற்கு நாட்டின் மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அனுமதி பெற்றது.

மே 22: "ஹர் கர் தஸ்தக் 2.0" தடுப்பூசி பிரச்சாரத்தை நடத்த மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியது.

மே 23 கோவிட் -19 மீண்டும் பரவியதைத் தொடர்ந்து, சவுதி அரேபியா தனது குடிமக்கள் இந்தியா உட்பட பதினாறு நாடுகளுக்குச் செல்ல தடை விதித்துள்ளது.

மே 27: சுரங்க அமைச்சகத்தின்படி, கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒடிசா, தெலங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளுக்காக மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து மாநில அரசுகள் மொத்தம் ₹ 1,459.93 கோடி செலவிட்டுள்ளன.

மே இறுதியில் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் 193.45 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. மொத்த COVID-19 தொற்று எண்ணிக்கை 4,31,58,087 ஆக இருந்தது. செயலில் உள்ள தொற்று 17,883 ஆக இருந்ததாக மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. COVID-19 காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 5,24,630 ஆக இருந்தது.

First published:

Tags: Corona, Covid-19, YearEnder 2022