மார்ச் 1 : இந்தியாவில் கோவிட் காரணமாக இடைநிறுத்தப்பட்ட பொது வகுப்பு பயணிகள் சேவைகளை ரயில்வே மீண்டும் தொடங்கியது.
மார்ச் 1 : இந்தியா ஜூன் முதல் நான்காவது கோவிட் அலையை எதிர்கொள்ளும். அதுவே இந்தாண்டு ஆகஸ்டில் உச்சம் பெரும் என்று ஐஐடி கான்பூர் ஆய்வு தெரிவித்தது
மார்ச் 2 : மும்பை உட்பட 14 மகாராஷ்டிர மாவட்டங்களில் சினிமா அரங்குகள், உணவகங்கள் 100% திறனில் செயல்பட அனுமதிக்கப்படுகின்றன. டெல்லியிலும் இரவு ஊரடங்கு முகக்கவசம் அணியாவிட்டால் போடும் அபராதம் நீக்கப்பட்டது. தமிழகத்திலும் இரவு ஊரடங்கு உட்பட அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டது.
மார்ச் 2 : குஜராத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள மக்களில் 95 சதவீதத்திற்கும் அதிகமானோர், கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் வழங்கப்பட்டதாக ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் தெரிவித்தார். மகாராஷ்டிராவில் 70% பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளனர்.
மார்ச் 4 : 12-17 வயதிற்குட்பட்டவர்களுக்கு Covovax தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அனுமதியை நிபுணர் குழு பரிந்துரைக்கிறது
மார்ச் 5 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் 'வாக்சிங் மைத்ரி' திட்டத்தின் ஒரு பகுதியாக உகாண்டா, கயானா, ஜமைக்கா மற்றும் நிகரகுவா ஆகிய நாடுகளுக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டன.
மார்ச் 6: சவுதி அரேபியாவில் உள்ள கோவிட் கட்டுப்பாடுகளை மொத்தமாக நீக்கியது மட்டுமல்லாமல் புனிதயாத்திரை வரும் பயணிகளுக்கும் கட்டுப்பாடுகளற்ற அனுமதியை வழங்கியது.
மார்ச் 9 :தென் கொரியாவில் அதிகபட்சமாக 3,42,446 தினசரி கோவிட்-19 வழக்குகள் பதிவாகின.
மார்ச் 13 : வயதானவர்கள் மற்றும் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களுக்கு நான்காவது கோவிட் ஷாட்டை இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் வெளியிடப்பட்டது
மார்ச் 14: அமெரிக்க முன்னாள் பிரதமர் பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அதில் இருந்து விரைவில் மீண்டு வர மோடி செய்தி அனுப்பினார்.
மார்ச் 16: சிங்கப்பூருக்கு தடுப்பூசி போட்ட இந்தியர்கள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் பயணம் செய்ய அனுமதி வழங்கியது.
மார்ச் 16: 12-14 வயதுக்குட்பட்டவர்களுக்கு Co-WIN மூலம் Biological E நிறுவனத்தின் "CorBEvax" தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
மார்ச் 20: புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு டோஸ் இடைவெளி 12-16 வாரங்களில் இருந்து 8-16 வாரங்களாக குறைக்கப்பட்டது.
மார்ச் 25 முழு தளர்வு காரணமாக ஷாங்காயில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் ஒரே நாளில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இதனை அடுத்து சீனா மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தியது.
மார்ச் 26 : தமிழ்நாடு அரசின் மெகா தடுப்பூசி முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட 5,92,008 லட்சம் பேருக்கு COVID-19 தடுப்பூசி போடப்பட்டது. அதில் 1,64,779 பேர் முதல் டோஸ் பெற்றனர். 4,01,731 பேர் இரண்டாவது டோஸ் பெற்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மார்ச் 27 இரண்டு வருட கோவிட் இடைவெளிக்குப் பிறகு இந்தியாவில் இருந்து சர்வதேச விமானங்கள் மீண்டும் தொடங்கின.
மார்ச் மாத இறுதி கணக்குப்படி 183.73 கோடி கோவிட் தடுப்பூசிகள் cowin திட்டத்தின் கீழ் போடப்பட்டிருந்தது. 4.30 கோடி பாதிக்கப்பட்ட நோயாளிகளில் வெறும் 0.03% நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். 5.21 லட்சம் பேர் கொரோனவால் மரணித்திருந்தனர். ஆனால் கொரோனா தொற்று தொடங்கியதில் இருந்து 2022 மார்ச் மாதத்தில் தான் முதன் முறையாக ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என்று பதிவு செய்யப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Barack Obama, Covid-19, Covishield, YearEnder 2022