கொரோனா பரவல் இந்தியாவிற்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் தொற்று எண்ணிக்கை குறைந்தபாடில்லை என்று சொல்லும் அளவிற்கு தினசரி தோற்று எண்ணிக்கை இருந்து வந்தது. திருவிழாக்களுக்கு அனுமதி அழைத்ததால் மே மாதம் வட மாநிலத்தில் அதிகரித்த எண்ணிக்கை ஜூன் மாதம் எப்படி திரும்பியது என்று பார்ப்போம்.
ஜூன் 1: பிப்ரவரி 6 முதல் மும்பையில் முதல் முறையாக 500-க்கும் மேற்பட்ட கோவிட்-19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஜூன் 1: 2 வருட கோவிட் இடைவேளைக்குப் பிறகு கேரளாவில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன
ஜூன் 6 இந்திய பயணிகளுக்கான கோவிட் தொடர்பான அனைத்து தடைகளையும் துருக்கி நீக்கியது.
ஜூன் 7 புதிய கட்டுப்பாடுகளை எதிர்த்து சீனாவின் ஷாங்காய் நகர மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகம் இருந்ததால் பொது முடக்கம் தொடர்ந்தது.
ஜூன் 9 : அஸ்ட்ராஜெனெகா புதிதாக பரவி வரும் "கடுமையான" கோவிட் தொற்றையும் எதிர்த்து போரிடும் என்ற நேர்மறை மருத்துவ பரிசோதனை முடிவை வெளியிட்டது.
ஜூன் 12: மகாராஷ்டிரா ஆக்டிவ் கோவிட் வழக்குகள் 10 நாட்களில் 241% அதிகரித்து 5,127ல் இருந்து 17,480 ஆக உயர்ந்தது. மேற்கு வங்கத்திலும் 100 % தாண்டி தோற்று எண்ணிக்கை அதிகரித்தது.
ஜூன் 12: மே 17 முதல் தினசரி கோவிட் தொற்று எண்ணிக்கையில் 1,000% உயர்வை மும்பை கண்டது. மும்பை மட்டுமல்லாது தானே போன்ற பெருநகரங்களிலும் தொற்று எணிக்கை அதிகரித்தது.
ஜூன் 15 இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் பூஸ்டர் டெல்டா, ஓமிக்ரான் மாறுபாடுகளுக்கு எதிரான செயல்திறனை பெற்றுள்ளது என்று ஐசிஎம்ஆர் ஆய்வு தெரிவித்தது.
ஜூன் 17 இந்தியாவின் வயது வந்தோரில் 89% பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பதை சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிப்படுத்தினார்.
ஜூன் 17: கோவிட்-19 தடுப்பூசியின் மொத்தம் 3,661,899 முன்னெச்சரிக்கை டோஸ்கள் 18-59 வயதுடையவர்களுக்கு வழங்கப்பட்டன.
ஜூன் 28 : 7-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சீரம் இன்ஸ்டிட்யூட்டின் Covovax DCGI ஆல் அங்கீகரிக்கப்பட்டது
மொத்த COVID-19 வழக்குகளின் எண்ணிக்கை 4,34,52,164.ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆக்டிவ் நோய் விகிதம் 0.03% இல் இருந்து 0.21% ஆக உயர்ந்தது. முக்கியமாக மகாராஷ்டிரா பகுதியில் அதிக தோற்று எண்ணிக்கை காணப்பட்டது. ஜூன் இறுதிப்படி 197.61 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, Covid-19, YearEnder 2022