நான்காவது அலை வரும் என்று எதிர்பார்த்த நிலையில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதால் அந்த அளவுக்கு தொற்று பரவல் ஏற்படவில்லை. சுமார் 199 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டிருந்த நிலையிலும் தினசரி பாதிப்பு 20,000ஐத் தொட்டது.
கொரோனா பரவல் போதாதென குரங்கம்மையும் இந்தியாவை நோக்கி படை எடுத்த ஜூலை மாதம் என்னென்ன நடந்தது என்று இந்த தொகுப்பில் பார்ப்போம்.
ஜூலை 2: சீனா அதிபர் ஜி ஜின்பிங் 'ஜீரோ-கோவிட் கொள்கை'யை வலியுறுத்திய சில நாட்களுக்குப் பிறகு 2 கோவிட்-19 வழக்குகள் கொரோனா பரவல் தொடங்கிய அதே வுஹானில் கண்டறியப்பட்டன.
ஜூலை 3:
மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் தினசரி பாதிப்பு 3000 வரை உயர்ந்தது. தமிழகத்திலும் 2200 வரை நோய் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது.
ஜூலை 6: 2 வருட கோவிட் தடைக்குப் பிறகு சீனா சர்வதேச விமானங்களை மீண்டும் இயக்கத் தொடங்கியது.
ஜூலை 8 : இந்தியாவில் கொரோனா வைரஸின் ஓமிக்ரான் புதிய துணை மாறுபாடு BA.2.75 கண்டறியப்பட்டது என்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.
ஜூலை 9: ஜூன் மாதத்தில் COVID-19 கட்டுப்பாடுகளை நீக்கிய பின்னர் தினசரி நடவடிக்கைகளை படிப்படியாக மீண்டும் தொடங்கும் திட்டத்துடன் ஷாங்காய் பெரும்பாலான திரையரங்குகளை மீண்டும் திறந்தது. அதே சமயம் சீனாவின் பல பகுதிகளில் சுமார் 10 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.
உலகளவில் 1 பில்லியன் டன் உணவு வீணடிக்கப்படுகிறது - ஐக்கிய நாடுகள் அறிவிப்பு!
ஜூலை 13 ஊதிய விகிதத்தை சீரமைக்கக் கோரி கோவையில் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 ஜூலை 2022: கேரளாவில் இந்தியாவின் முதல் குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஜூலை 15 கொரோனா பாதிப்பு அளவை கட்டுக்குள் கொண்டு வர 75 நாட்கள் - 'கோவிட் தடுப்பூசி அமிர்த மஹோத்ஸவா' தொடங்கப்பட்டது. அனைத்து பெரியவர்களுக்கும் இலவச கோவிட் பூஸ்டர் டோஸ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.
ஜுலே 17 இந்தியாவில் சிகிச்சையில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை மொத்த நோய்த்தொற்றுகளில் 0.33% ஆக உயர்ந்தது.
ஜூலை 21 தடுப்பூசி 2 டோஸ்கள் மற்றும் 2 பூஸ்டர்கள் செலுத்திக்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு மிகவும் லேசான அறிகுறிகளோடு கோவிட் தொற்று உறுதியானதாக வெள்ளை மாளிகை அறிவித்தது.
ஜூலை 31 : இந்தியாவில் கொரோனா வைரஸின் தீவிரம் பொருந்திய கவலை தரும் புதிய மாறுபாடு (Variant Of Concern)எதுவும் கண்டறியப்படவில்லை என்று அரசாங்கம் மக்களவையில் அறிவித்தது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19, Joe biden, Monkeypox, YearEnder 2022