ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நினைவுகள் 2022 - மூன்றாம் அலை முதல் இரண்டாம் டோஸ் வரை.. ஜனவரியில் ஆட்டிப்படைத்த கொரோனா

நினைவுகள் 2022 - மூன்றாம் அலை முதல் இரண்டாம் டோஸ் வரை.. ஜனவரியில் ஆட்டிப்படைத்த கொரோனா

ஜனவரி மாத கொரோனா செய்திகள்

ஜனவரி மாத கொரோனா செய்திகள்

ஜனவரி 2022 மாதத்தில் நடந்த முக்கிய கொரோனா செய்திகளின் தொகுப்பு...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

டிசம்பர் 2019 இல் சீனாவின் வூஹான் மாகாணத்தில் தொடங்கியது இந்த கொரோனா தொற்று  பரவல், அங்குள்ள உள்ள இறைச்சி சந்தையில் இருந்து படி படியாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவியது.

சார்ஸ் நோய் போலவே அறிகுறிகள் கொண்ட இந்த நோய்க்கு கொரோனா வைரஸ் டிசீஸ் '19 என்று பெயரிட்டனர். கோவிட் '19 நோய் பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. 2020 இல் முதல் அலை, 2021 இல் இரண்டாவது அலை என்று உலகையே ஆட்டி வைத்தது. கொரோனா வைரஸின் கிட்டத்தட்ட 30ஆவது திரிபான ஓமிக்ரான் தென்னாபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்டது.

2021 மத்தியில் மலாவி, மொசாம்பிக், நமீபியா, தென்னாப்பிரிக்கா, சாம்பியா, ஜிம்பாப்வே, அல்ஜீரியா, எகிப்து மற்றும் லிபியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில்  3ஆவது அலை அடித்துக்கொண்டிருக்க 2021 இறுதியில் 3 ஆவது அலைக்கான அச்சுறுத்தல் இந்தியாவில் நிலவி வந்த நிலையில் 2022 பிறந்தது.

ஜனவரி 2022.......

டிசம்பர் 2 2021 இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் முதன் முதலில் கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டது. வீரியம் அதிகம் கொண்ட இந்த கிருமி இந்தியாவில் மூன்றாவது அலையை ஜனவரி மாதம் உருவாக்கியது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை என்பது  முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 2 முதல் 3 மடங்காக அதிகரித்தது.

ஜனவரி 1: இரண்டாம் அலை காரணமாக பொது கூட்டங்கள், அணிவகுப்புகள், மக்கள் கூட்டங்கள், சந்திப்புகள், விழாக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டது. இந்தியாவின் அநேக மாநிலங்களில் பள்ளி திறக்க திட்டமிடபட்டிருந்ததும் ஒத்திவைக்கப்பட்டது.

ஜனவரி 1 : அன்று இந்திய மருத்துவ ஆணையம் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளித்தது. இதை தொடர்ந்து 9-12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

ஜனவரி 3: குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்ட பின்னர் நியூயார்க், நெதர்லாந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டது.

ஜனவரி 18: அமெரிக்கா தனது குடிமக்கள் அனைவருக்கும் வீட்டில் இருந்தே கொரோனா பரிசோதனை செய்யும் கிட்டை இலவசமாக வழங்கியது.

நினைவுகள் 2022 : அமெரிக்க நாணயத்தில் இடம் பிடித்த முதல் கருப்பின பெண்.. பட்டத்தை இழந்த பிரிட்டன் இளவரசர்.. ஜனவரி மாத நிகழ்வுகளின் தொகுப்பு இதோ..!

ஜனவரி 19: கிரீஸ் நாட்டில் வயதான முதியவர்கள் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கடுமையான தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது.

ஜனவரி 19: இந்திய அளவில் ஜனவரி மாதத்தின் உச்சகட்டமாக, ஒரே நாளில் சுமார்  3 லட்சம் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. இது அந்த மாதத்தின் மொத்த தினசரி பதிவை விட 27% அதிகமாகும்.

ஜனவரி 20: ஓமிக்ரான் கிருமிக்கு எதிராக மக்களை பாதுகாக்கும் பூஸ்டர் டோஸ்கள் உருவாகும் பணி இந்தியாவில் தொடங்கியது.

ஜனவரி 29:  கனடாவின் ஒட்டாவா பகுதியில் உள்ள போர் நினைவகத்தில் கட்டாய தடுப்பூசி சட்டத்தை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

ஜனவரி 30 : இந்திய தடுப்பூசி தரவுகளின்படி , 166.59 கோடி மக்களுக்கு முதல் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இது மொத்த 18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மக்கள்தொகையில் 94% ஆகும். இதில்  உத்திரபிரதேசம் 100% பெரியவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போட்ட பெருமையை பெற்றது. தமிழகத்தில் 90% மக்களுக்கு நிறைவடைந்தது.

ஜனவரி 30 : பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் 5-11 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் மற்ற நாடுகளும் தங்கள் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு போட்டு சோதனை செய்யத் தொடங்கினர்.

ஜனவரி 31:  இரண்டாம் டோஸ் தடுப்பூசி 75% போடப்பட்டிருந்தது. 6.5 கோடி பேர் இரண்டாம் டோஸுக்கு காத்திருந்தனர்.

இந்தியாவில் மட்டும் 4.08 கோடி மக்கள் கொரோனா நோயாளிகளாக இருந்தனர். ஜனவரி வரை 4.9 லட்சம் இறப்புகள் பதிவு செய்யப்பட்டன.

உலக அளவில் எடுத்துக்கொண்டால் அமெரிக்க தினசரி 5 முதல் 7 லட்சம்  தொற்றுக்களை உறுதி செய்து அதிகபட்ச நோயாளிகளை கொண்டு விளங்கியது.

ஐரோப்பிய- ஆசிய கண்டத்தில் ரசியா அதிக நோயாளிகளை கொண்டிருந்தது.

First published:

Tags: Covid-19, YearEnder 2022