ஜனவரி மாதம் தொடங்கிய மூன்றாம் அலை இந்தியாவின் பல மாநிலங்களுக்கு பரவி தீவிரம் அடையத் தொடங்கியது. சில உலக நாடுகளில் மூன்றாம் அலை அடித்து ஓய்ந்தது. குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தத் தொடங்கியதால் பல நாடுகள் முழு தளர்வுகளை அறிவித்தது.
பிப்ரவரி 1: மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, சண்டிகர், ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் பள்ளிகளில் ஆஃப்லைன் வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டன. ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற அடிப்படையில் வகுப்புகள் தொடங்கியது.
பிப்ரவரி 2: கொரோனா கிருமியின் 32 ஆவது திரிபான ஓமிக்ரான் BA.2 வகை கண்டறியப்பட்டது. BA.1 வகையை விட பரவல் தன்மை அதிகம் உள்ள கிருமியாக அடையாளம் காணப்பட்டது. அதே சமயம் முதல் வகை ஓமிக்ரான் தொற்று வந்தவர்களுக்கு இரண்டாம் வகை 30-50 நாட்கள் வரை 95% வராது என்று ஆய்வுகள் குறிப்பிட்டன.
பிப்ரவரி 7 : டெல்லி, உத்திரபிரதேசம், குஜராத், கேரளா, ஒடிசா,பீகார் மாநிலங்களில் மேல்நிலை பள்ளி வகுப்புகள் , கல்லூரிகள் மீண்டும் நேரடி வகுப்புகளைத் தொடங்கியது.
பிப்ரவரி 9: இந்திய நிறுவனமான கிளென்மார்க் நிறுவனம் கொரோனா பரவலை தடுக்கும் மூக்கு வழியாக உறிஞ்சக்கூடிய தடுப்பு மருந்துக்கு இந்தியாவின் மருந்து கட்டுப்பாடு கழகம் ஒப்புதல் வழங்கியது.
பிப்ரவரி 14: கடைசியாக எஞ்சியிருந்த கோவிட் இல்லாத நாடுகளில் ஒன்றான குக் தீவுகள், கொரோனா வைரஸின் முதல் தொற்றை பதிவு செய்துள்ளது.
பிப்ரவரி 14 : இந்தியாவின் அநேக மாநிலங்களில் மழலை பள்ளிகள் அங்கன்வாடிகள், தொடக்கநிலை, உயர்நிலை பள்ளிகள் உட்பட அனைத்து கல்வி நிலையங்களும் திறக்கப்பட்டது.
பிப்ரவரி 20 அன்று ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்ததை அடுத்து அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் பணி நடைபெற்றது. அதனால் உக்ரைனில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டும் அங்கிருந்து கிளம்பும் போதே RT-PCR டெஸ்ட் எடுக்க வேண்டிய கட்டாயத்தை இந்திய அரசு தளர்த்தியது. இங்கு வந்த பின்னர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
நினைவுகள் 2022 - பிப்ரவரி மாத முக்கிய சர்வதேச நிகழ்வுகளின் தொகுப்பு இதோ
பிப்ரவரி 21 : இந்திய நிறுவனம் பயோலொஜிக்கல் E தயாரித்த தடுப்பூசியை 12-18 வயதான சிறார்களுக்கு செலுத்த மத்திய அரசின் ஒப்புதல் பெற்றது.
பிப்ரவரி 23 : உலக சுகாதார நிறுவனம் மத்திய மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளில் ஹப் அமைத்து கொரோனா நோய் தடுப்பு மருந்து தயாரிப்பு பயிற்சிகளை வழங்கி வந்தது. அதன் முதல் ஹப் தென்னாப்பிரிக்காவில் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 2022 இல் தனது இரண்டாவது ஹப்பை தென் கொரியாவில் அமைத்தது.
பிப்ரவரி 24 : அதேநேரம் ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த இங்கிலாந்து, அயர்லாந்து போன்ற நாடுகள் தங்கள் கட்டுப்பாடுகளை முழுவதும் தளர்த்தியது. அயர்லாந்து, ஸ்காட்லாந்து நாடுகள் முகக்கவசம் அணிவதற்கு தளர்வுகள் விதித்தது.
பிப்ரவரி 28 : தொற்று பரவல் காரணமாக இந்தியாவின் ஒடிஷாவில் ஹோலி பண்டிகை கொண்டாட தடை விதிக்கப்பட்டது.
ஹாங்காங் அரசு, ஐக்கிய ராஜ்யம் தங்கள் நாட்டிற்கு வரும் பயணிகளுக்கு என்று தனியாக VACCINE PASSPORT என்பதை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நோய் தொற்று அல்லாத, தடுப்பூசி போட்டவர்கள் தான் அவர்களது நாட்டில் நுழைய முடியும் என்று ஆணையிட்டது.
பிப்ரவரி இறுதி கணக்கு படி இந்தியாவில் மொத்தம் 177.5 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. சராசரியாக 2 கோடி முன்களப்பணியாளர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டது.
பிப்ரவரி இறுதி வரை மொத்தம் 4.28 கோடி இந்தியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதில் 1.48 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வந்தனர். தொற்றால் இறப்புகள் என்பது இந்த மாதம் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. ஒரு சில நாட்களில் டெல்லி, மும்பை, வட கிழக்கு மாநிலங்களில் இறப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
ஆர்மீனியா, அஜர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, ரஷ்யா மற்றும் உக்ரைனில் வழக்குகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் நிலையில், கிழக்கு ஐரோப்பா முழுவதும் ஓமிக்ரான் நோய் பரவல் அதிகரித்து வந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19, Russia - Ukraine, YearEnder 2022