ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நினைவுகள் 2022 : திக் திக் தருணங்களோடு முடியும் டிசம்பர் மாத கொரோனா செய்திகள்

நினைவுகள் 2022 : திக் திக் தருணங்களோடு முடியும் டிசம்பர் மாத கொரோனா செய்திகள்

டிசம்பர் மாத கொரோனா செய்திகள்

டிசம்பர் மாத கொரோனா செய்திகள்

Year Ender 2022 : டிசம்பர் மாதத்தில் நடந்த முக்கிய கொரோனா தொடர்பான செய்திகளின் தொகுப்பு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

டிசம்பர் 2019 இல் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய் தொற்று 3 ஆண்டுகளை நிறைவு செய்து விட்டது. ஆனால் இன்னும் அதன் பிடியில் இருந்து உலகம்  மீளவில்லை என்று சொல்லும் அளவிற்கு நிலைமை உள்ளது. சொல்லப்போனால் மீண்டும் அதே போல் ஊரடங்குகள் வருமோ என்ற பயத்தில் முடியும் 2022 வருடத்தின் டிசம்பர் மாத கொரோனா செய்திகளின் தொகுப்பு இதோ..

டிசம்பர் 02, கடந்த மூன்று வாரங்களில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகளின் அதிகரிப்புக்குப் பிறகு பெரு நாடு,கோவிட்-19 தொற்றுநோயின் ஐந்தாவது அலைக்குள் நுழைந்துள்ளது என்று அதன் சுகாதார அமைச்சர் கெல்லி போர்டலாட்டினோ அறிவித்தார்.

டிசம்பர் 02:  இந்தியாவில் மொத்த தொற்று எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை என்பது வெறும் 0.01% ஆக குறைந்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்தது.

டிசம்பர் 03: உலக மக்கள்தொகையில் 90% இப்போது கோவிட்-19 க்கு சில எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருப்பதாக WHO மதிப்பிட்டுள்ளது. ஆனால் சிக்கலான புதிய மாறுபாடுகள் இன்னும் தோன்றக்கூடும் என்று எச்சரித்தது.

டிசம்பர் 5: சீனாவின் வுஹான் ஆராய்ச்சி ஆய்வகத்தில் பணிபுரிந்த அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர், COVID-19 ஒரு "மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்" என்று கூறியுள்ளார்.

டிசம்பர் 07: வெளிநாட்டுப் பயணிகளுக்கான கோவிட்-19 கட்டுப்பாடுகளை இலங்கை நீக்கியுள்ளது. அதேபோல் நாடு முழுவதும் கோவிட் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக சீனா அறிவித்தது.

21-டிசம்பர் இந்தியாவில், குஜராத்தின் வதோதராவில் உள்ள ஒரு NRI பெண்மணியிடம் கோவிட் ஓமிக்ரான் BF-7 மாறுபாட்டின் முதல் வழக்கு கண்டறியப்பட்டது.

டிசம்பர் 22 : சீனாவில் மிகப்பெரிய கோவிட் எழுச்சியை உண்டாக்கும் Omicron BF.7 துணை வகையின் நான்கு வழக்குகள் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. இவை குஜராத் மற்றும் ஒடிசாவில் கண்டறியப்பட்டுள்ளன.

ஒரே ஆண்டில் 4.12 லட்சம் விபத்துகள்.... 1.53 லட்சம் பேர் பலி... அதிர்ச்சி தகவல் !

டிசம்பர் 23: சீனாவின் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 18 சதவீதம் அல்லது 248 மில்லியன் மக்கள் டிசம்பர் 1-20 வரை COVID-19 நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

டிசம்பர் 29: அடுத்த 40 நாட்கள் முக்கியமானவை, ஏனெனில் ஜனவரியில் இந்தியாவில் கோவிட் வழக்குகள் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 30 :COVID-19 வழக்குகளின் தற்போதைய அதிகரிப்பு குறித்தும், நிலைமை குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், WHO இன் நிபுணத்துவம் வாய்ந்த குழு சீனாவிற்கு சென்று ஒரு உயர்மட்ட கூட்டத்தை நடத்தியது.

இந்த மாதத்தின் மத்தியில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 4000 கடந்து உயர்ந்தாலும் மாதத்தின் முடிவில் மீண்டும் 3,609 என்ற எண்ணிக்கைக்கு திரும்பியது. இருப்பினும் சீனாவில் இருந்து பரவும் புதிய தொற்று இந்தியாவையும் பாதிக்கும் என்ற அச்சத்துடன் ஆண்டு முடிகிறது.

அடுத்த ஆண்டும் கொரோனா பரவல் அதிகரிக்குமா, மீண்டும் லாக்டவுன் வருமா என்ற கேள்விகளோடு புது வருடம் பிறக்க இருக்கிறது. பாதுகாப்பாக இருங்கள். முகக்கவசம் அணியுங்கள். அடிக்கடி கை கழுவுங்கள். கொரோனா பாதிப்பில் இருந்து தள்ளி இருங்கள்.

First published:

Tags: Corona, Covid-19, YearEnder 2022