ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நினைவுகள் 2022- மிஷன் கோவிட் சுரஸ்கா முதல் 200 கோடி தடுப்பூசி சாதனை வரை.. ஆகஸ்ட் மாத கொரோனா செய்திகள் இதோ

நினைவுகள் 2022- மிஷன் கோவிட் சுரஸ்கா முதல் 200 கோடி தடுப்பூசி சாதனை வரை.. ஆகஸ்ட் மாத கொரோனா செய்திகள் இதோ

ஆகஸ்ட் மாத கொரோன செய்திகள்

ஆகஸ்ட் மாத கொரோன செய்திகள்

Year Ender 2022 : 2022 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த முக்கிய கொரோனா தொடர்பான செய்திகளின் தொகுப்பு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

அமெரிக்க அதிபர் உட்பட பலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து உலகத்தின் பல பகுதிகளில் மீண்டும் சில கட்டுப்பாடுகளுடன் கூடிய அறிவிப்புகள் வெளியாகி வந்தது. பூஸ்டர் டோஸ்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்க திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.

20000 தினசரி எண்ணிக்கையோடு தொடங்கிய ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா என்னென்ன செய்தது. அதை கட்டுக்குள் கொண்டு வர அரசாங்கங்கள் என்னென்ன செய்தது என்பதை இந்தத் தொகுப்புள் பார்ப்போம்.

ஆகஸ்ட் 4: கோவிட்-19 எதிர்ப்பு தடுப்பூசிகளை முன்னெச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளுமாறு மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

ஆகஸ்ட் 6: மகாராஷ்டிரா, கேரளாவை அடுத்து டெல்லியில் தொற்று எண்ணிக்கை 2500 ஐத் தாண்டியது.

ஆகஸ்ட் 9: Covishield அல்லது Covaxin மூலம் இருமுறை தடுப்பூசி போடப்பட்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கை மருந்தாக Biological E's Corbevax-ஐ விரைவில் மத்திய சுகாதார அமைச்சகம் அங்கீகரித்தது.

ஆகஸ்ட் 9: முன்னெச்சரிக்கை டோஸ்களின் வேகத்தை அதிகரிக்க, குறைந்தபட்சம் 50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசியை "அவசரமாக" வழங்குமாறு மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் தெலுங்கானா அரசு வலியுறுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 10 : டெல்லியின் பல மாதிரிகளில் Omicron துணை மாறுபாடு BA 2.75 கண்டறியப்பட்டது. தொற்று அதிகரிப்பதை நினைத்துக் கவலைப்படவேண்டாம். சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 11: சீனாவில் இருந்து வீடு திரும்பிய இந்திய மாணவர்கள் மீதும் தங்கள் படிப்பை தொடர ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சீன அரசு செய்தி வெளியிட்டது.

''தயவு செஞ்சு ரெஸ்ட் எடுங்க..'' பிரதமர் மோடிக்கு உருக்கமாக அட்வைஸ் சொன்ன மம்தா பேனர்ஜி!

ஆகஸ்ட் 12:  நாட்டில் தினமும் சராசரியாக 15,000க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுகள் பதிவாகி வருவதால், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு பெரிய அளவில் கூட்டம் சேராமல், அனைவரும் கோவிட் நெறிமுறைகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு மத்திய அரசு மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது.

ஆகஸ்ட் 14: ஹரியானாவில் கடந்த ஒரு மாதத்தில் 20,000 புதிய தொற்றுகள் உறுதி செய்யப்பட்டன.

ஆகஸ்ட் 15 : கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் குடிமக்கள் ஒன்றிணைந்ததற்காக தனது சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்தியா 200 கோடி தடுப்பூசியை செலுத்தியதையும் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 17 : டெல்லியில் அதிகரித்து வரும் கோவிட்டைக் கருத்தில் கொண்டு, பயணிகள் விமானங்களுக்குள் முகமூடி அணிவதையும், கை சுகாதாரத்தைப் பேணுவதையும் உறுதி செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ ஆணையிட்டது.

ஆகஸ்ட் 18: மத்திய நிதி அமைச்சகம் 'மிஷன் கோவிட் சுரஸ்கா' திட்டத்தின் கீழ் கோவிட் தடுப்பூசி மேம்பாட்டுக்கு ₹900 கோடி ஒதுக்கியதாக தெரிவித்துள்ளது .

ஆகஸ்ட் 24: அமிதாப் பச்சன் இரண்டாம் முறையாக கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.

First published:

Tags: Corona, Covid-19, YearEnder 2022