முழு ஊரடங்கு மார்ச் மாதம் அறிவித்ததை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிய உலகம் என்னென்ன மாறுதல்களை ஏப்ரல் மாதத்தில் சந்தித்தது என்பதை இங்கே காண்போம்.
ஏப்ரல் 1 : இந்தியாவின் இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் கோவிட் கட்டுப்பாடுகளை திரும்பப் பெறுகிறது, முகமூடிகளின் பயன்பாட்டை மட்டும் வலியுறுத்துகிறது
ஏப்ரல் 4 தமிழகத்தில் தடுப்பூசி கட்டாயம் என்று அறிவித்ததை எதிர்த்து பலதரப்பட்ட மக்கள் உரிமை மீறல் என்று போராட்டம் நடத்தினர். அதனால் தடுப்பூசி கட்டாயம் அல்ல. விருப்பத்தின் பேரில் போட்டு கொள்ளலாம் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
ஏப்ரல் 6 : 1 வாரமாக தொடர்ந்து பாண்டிச்சேரியில் கொரோனா தொற்று எதுவும் பதிவாக வில்லை என்று அறிவித்தது.
ஏப்ரல் 8 : குஜராத்தில் ஒருவர் கொரோனா வைரஸ் மாறுபாடு XE நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மார்ச் 26 அன்று இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட இந்த தொற்று ஓமிக்ரான் தொற்றை விட வீரியம் பெற்றது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 9: இந்தியாவில் உள்ள கோவிஷீல்ட் ₹ 600 லிருந்தும், கோவாக்சின் ₹ 1,200 விலையில் இருந்தும் ₹ 225 ஆக குறைக்கப்பட்டது.
ஏப்ரல் 10 : 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் இரண்டாவது டோஸ் போட்டு ஒன்பது மாதங்கள் நிறைவு பெற்றிருந்தால், பூஸ்டர் ஷாட் என்று அழைக்கப்படும் முன்னெச்சரிக்கை டோஸ் போட்டுக்கொள்ளலாம் என்று இந்திய அரசு அறிவித்தது.
ஏப்ரல் 11 முதல் 17 வரை உலகம் முழுவதும் சுமார் 5 மில்லியன் புதிய கோவிட்-19 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஏப்ரல் 12 :கம்போடியா நாட்டிற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் அனுப்பி வைக்கப்பட்டது.
நினைவுகள் 2022 - குக் தீவையும் விட்டுவைக்காத கொரோனா.. பிப்ரவரி மாத கொரோனா நிலவரம்
ஏப்ரல் 12 :இரண்டு புதிய துணை வகைகள் - BA.4 மற்றும் BA.5 - தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஏப்ரல் 12 : 6 நாட்களில் குஜராத் பல்கலைக்கழகத்தில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தனிமை படுத்தப்பட்டனர்
ஏப்ரல் 13 கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வந்ததால் , சீனாவின் ஷாங்காயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தனிநபர் சேவைகளை மூடியது
ஏப்ரல் 18 கோவிட்-19 தொற்றுநோய்களின் போது பிறந்த குழந்தைகள், வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு பிறந்த குழந்தைகளை விட மெதுவாக பேசக்கூடும் என்று பிரவுன் பல்கலைக்கழகம் மற்றும் லீனாவால் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவித்தது.
ஏப்ரல் 22 மெட்ராஸ் ஐஐடி-யில் 30 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.
ஏப்ரல் 24 நாட்டில் அதிகரித்து வரும் கோவிட்-19 வழக்குகளைக் கருத்தில் கொண்டு, UNICEF அமைப்பின் GAVI தடுப்பூசி விநியோக திட்டத்தின் கீழ் இந்தியாவின் இலவசமாக வழங்கப்படும் 10 கோடி டோஸ் கோவிஷீல்டை பயன்படுத்துமாறு இந்திய சீரம் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் ஏப்ரல் வரை 188.89 கோடி கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளன. மொத்த பாதிப்புகளில் செயலில் உள்ள நோயாளிகள் எண்ணிக்கை 0.04% ஆக இருந்தது. நோயில் இருந்து மீட்பு விகிதம் 98.74% ஆக இருந்தது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Covid-19, YearEnder 2022