மீண்டும் சந்தைக்கு வருகிறது யமஹா R3!

news18
Updated: February 13, 2018, 6:27 PM IST
மீண்டும் சந்தைக்கு வருகிறது யமஹா R3!
news18
Updated: February 13, 2018, 6:27 PM IST
ஒரு சில மாற்றங்களுடன் மீண்டும் சந்தைக்கு வருகிறது யமஹா R3.

டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எஃஸ்போ வாகன கண்காட்சியில் யமஹா நிறுவனத்தின் YZF-R15 பைக் அறிமுகம் செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல் இந்த கண்காட்சியிலேயே பைக் பிரியர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய மற்றொரு விஷயமும் நடந்தேறியது. அதுதான் யமஹாவின் R3 பைக்கின் மறு வருகை.

நடுவில் சில ஆண்டுகளாக சந்தையில் இருந்து ஓய்வு பெற்றிருந்த யமஹா R3 பைக், இன்னும் சிறப்பான மாற்றங்களுடன் மீண்டும் சந்தைக்கு திரும்பியுள்ளது.

இந்த யமஹா R3 பைக் BS-IV ரக மாடலாகவும், பிரேக்கிங் சிஸ்டத்தில் மாற்றங்களுடனும் மற்றும் ஸ்போர்ட்ஸ் டைப் மெட்செலர் டையர்ஸ் அமைப்புடன் மீண்டும் சந்தையில் களம் காண உள்ளது.

தங்களது வாடிக்கையாளர்களிடம் நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையிலும் வாடிக்கையாளர்களின் ஆலோசனையின் படியும் , R3 பைக்கில் சில மாறுதல்களை செய்துள்ளது யமஹா இந்தியா நிறுவனம்.

குறிப்பாக டயர் மற்றும் பிரேக்கிங் சிஸ்டமான ABSல் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக், ரேசிங் ப்ளூ மற்றும் மேக்னா பிளாக் வண்ணங்களிலும் வர உள்ளது.

இந்திய சந்தையில் (டெல்லி) தோராயமாக இதன் விலை ரூ.3.48 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Loading...
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்