• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 2021.. இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 2021.. இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

World Tsunami Awareness Day 2021 : நவம்பர் 5 ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

  • Share this:
'சுனாமி' என்ற வார்த்தையை கேட்கும் போதே மனதில் தானாகவே பதற்றம் தொற்றி கொள்கிறது. இந்த வார்த்தை ஜப்பானிய சொல் ஆகும். தமிழில் ஆழிப்பேரலை என்று சுனாமி குறிப்பிடப்படுகிறது. அரிதான நிகழ்வாக பார்க்கப்படும் சுனாமி, மிகவும் ஆபத்தான அதிக அழிவை ஏற்படுத்த கூடிய பேரழிவு என்பது நம் அனைவருக்குமே தெரிந்திருக்கும். கடலில் உள்ள நீரின் இடப்பெயர்ச்சியால் ஏற்படும் அலைகளின் தொடர். தாக்குதலாக வெளிப்படும் சுனாமி பொதுவாக எரிமலை வெடிப்பு, நிலச்சரிவு அல்லது நீருக்கடியில் வெடிப்பு போன்ற பல காரணங்கள் ஏற்படுகின்றன.

கடந்த 17 ஆண்டுகளுக்கு முன் 2004-ல் டிசம்பர் 26-ஆம் தேதி இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி பேரழிவு இந்தியா, இலங்கை உட்பட 14 நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை வாரி சுருட்டி சென்றது நினைவிருக்கலாம். இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு தாய்லாந்து ஆகும். இலங்கை, இந்தோனேசியா, இந்தியாவில் மட்டும் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட இந்த சுனாமியின் கொடிய பேரழிவு கடந்த 100 ஆண்டுகளில் நிகழ்ந்த மற்ற இயற்கை பேரழிவுகளை விட அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டு சென்றது. இதனிடையே மக்களுக்கு சுனாமி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5-ஆம் தேதி  உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

also read :குளிர்காலத்தில் குழந்தைகளின் சருமத்தை பாதுகாக்க உதவும் 5 ஸ்கின்கேர் டிப்ஸ்..

உலக சுனாமி விழிப்புணர்வு தின வரலாறு..

கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பரில், ஐக்கிய நாடுகளின் பொது சபை நவம்பர் 5 ஆம் தேதியை உலக சுனாமி விழிப்புணர்வு தினமாக அறிவித்தது. அப்போதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் சுனாமி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த பேரழிவு ஏற்பட்டால் அதன் விளைவாக உண்டாகும் ஆபத்துகளை குறைக்க தேவையான புது அணுகுமுறைகளை பகிர்ந்து கொள்ளவும் நாடுகள், சர்வதேச அமைப்புகள் மற்றும் சிவில் சமூகங்களுக்கு ஐ.நா சபை அழைப்பு விடுத்துள்ளது. முக்கியமாக இந்நாள் தாழ்வான தீவுகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் சுமார் 700 மில்லியன் மக்களுக்கு சுனாமி பற்றி யவிழிப்புணர்வை உருவாக்க அனுசரிக்கப்படுகிறது.

also read : சுவாச நோய் தொற்றுகளின் அறிகுறிகளை குறைக்க ஜிங்க் சப்ளிமெண்ட்ஸ்கள் உதவுமா? ஆய்வில் வெளியான தகவல்..

தீம் (கருப்பொருள்):

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் 2021-ன் தீம் Sendai Seven Campaign என்பதாகும். சுனாமி விழிப்புணர்வு மற்றும் பேரழிவை சமாளிக்க தேவையான திறன்களை ஏற்படுத்த வளரும் நாடுகளுக்கு சர்வதேச நாடுகள் ஒத்துழைப்பு அளிப்பதே இதன் முக்கிய நோக்கம். இது பற்றி பேசியுள்ள ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், சிக்கலான உலகளாவிய நெருக்கடி அதிகரித்து வருவதால் அனைவருமே எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

சுனாமி அபாயத்தைக் குறைப்பதும், அனைத்து பேரிடர்களையும் சமாளிக்கும் திறனை உருவாக்குவதும் முக்கியம். எனவே நடப்பாண்டு கருப்பொருளான Sendai Seven Campaign, வரும் 2030-ம் ஆண்டுக்குள் தற்போதைய கட்டமைப்பை செயல்படுத்த மற்றும் உரிய நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்கு போதுமான மற்றும் நிலையான ஆதரவு அளிப்பதன் மூலம் வளரும் நாடுகளுக்கு சர்வதேச ஒத்துழைப்பை கணிசமாக மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: