World toilet day : பொதுவெளியில் மலம் கழிக்கும் 673 மில்லியன் மக்கள்! கழிவறைப் பயன்பாட்டின் அவசியம் என்ன?
55 சதவீதம் மக்கள் அடியோடு அழிக்கப்பட வேண்டிய நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உலக கழிவறை தினம்
- News18
- Last Updated: November 19, 2019, 6:02 PM IST
நவீன தொழில்நுட்பம் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டினாலும் கழிவறைப் பயன்பாடு குறித்த அவசியத்தை இன்றும் விழிப்புணர்வு செய்ய வேண்டியிருக்கிறது.
அதனால்தான் இன்றளவும் நீரினால் பரவும் நோயால் உலகம் முழுவதும் ஆயிரக்கணக்காணோர் இறக்கின்ற அவலம் ஏற்படுகிறது. எனவேதான் சுகாதாரத்தின் மீதான விழிப்புணர்வு அதிகரிக்க ஐக்கிய நாடுகள் சபை ’நவம்பர் 19’ஆம் நாளை (இன்று) உலக கழிவறை தினமாக அறிவித்தது.
உலகம் முழுவதும் இன்னும் 673 மில்லியன் மக்கள் வெளிப்புறத்தில் இயற்கை உபாதைகளை கழிப்பதாகவும், இது உலக அளவில் மிகப்பெரிய பிரச்னையாக பார்க்கப்படுவதாக யுனிசெஃப் நிறுவனத்தின் அதிகாரி டாம் ஸ்லேமேக்கர் தெரிவித்துள்ளார்.இப்படி ஒன்பது சதவீதம் உலக மக்கள் மைதானங்கள், ஆற்றங்கரைகள், கடற்கரைகளில் மலம் கழிப்பதாக யுனிசெஃப் மட்டுமன்றி உலக சுகாதார அமைச்சகமும் தெரிவித்துள்ளது. இதில் துணை சஹாரா ஆஃப்ரிக நாடுகளில்தான்(sub saharan) அதிக அளவில் இயற்கை உபாதைகளை கழிக்க பொதுவெளியைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இதுபோன்ற பழக்கங்கள் மிகவும் பின் தங்கிய, ஒடுக்கப்பட்ட மக்கள்தான் அதிகம் செய்வதாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை அனுபவிப்பதும் அவர்கள்தான் என்கிறார் ஸ்லேமேக்கர். ”அவர்கள்தான் அப்புறப்படுத்தப்படாத கழிவுகளுக்கு மத்தியில் வாழ்கின்றனர். அது எதிர்காலத்தில் பெரிய விளைவுகளை உண்டாக்கும். குறிப்பாக அங்கு வளரும் குழந்தைகள் உடல் நலத்தில் பெரிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும்” என்கிறார் ஸ்லேமேக்கர்.
இந்த பிரச்னை வெறும் பொதுவெளியில் மலம் கழிப்பதால் மட்டும் ஏற்படுவது கிடையாது. டாய்லெட் கழிவுகளையும் சீராக சேமித்து முறையாக அப்புறப்படுத்தவில்லை என்றாலும் இந்தப் பிரச்னை வரும். இந்த செயலை உலக அளவில் 4.2 பில்லியன் மக்கள் செய்யத் தவறுவதாக குறிப்பிடுகிறது யுனிசெஃப். அதில் 55 சதவீதம் மக்கள் அடியோடு அழிக்கப்பட வேண்டிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
”இதனால் அதிகமாக குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு காரணமாக பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு போதுமான ஊட்டச்சத்தும் கிடைக்காததால் வயிற்றுப்போக்கு அடுத்த கட்டத்திற்கு சென்று நிமோனியாவை உருவாக்குகிறது. இதுஒடுக்கப்பட்ட, வறுமையில் வாழும் மக்களுக்கு தொடர் கதையாக இருக்கிறது“ என வருத்தம் தெரிவிக்கிறார் லெஸ் ரோபர்ட். இவர் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக இருக்கிறார்.

மேலும் அவர் “ வயிற்றுப் போக்கை உண்டாக்க கூடிய ரோட்டா வைரஸ் அழிக்கப்பட முடியாத வைரஸ் அல்ல. அது 1980-களில்தான் கொடிய வைரஸாக இருந்தது. இன்று அதை அழிப்பது சுலபமானதே. ஆனாலும் அது தொடர்கிறதெனில் போதுமான சுகாதார விழிப்புணர்வு இல்லாததே காரணம். 10, 20, 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த அதே பிரச்னை இன்றும் தொடர்கிறதெனில் அதை சரிசெய்யாதது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது” என்கிறார்.
இப்படி இதற்கெல்லாம் ஒரே தீர்வு ஒன்றே ஒன்றுதான். நோய்க் கிருமிகளின் பரவலைத் தடுக்க தேவைக் கழிவறை. இதை ஏன் இன்றளவும் உலக அளவில் சரி செய்ய பெரிய சிக்கலாக இருக்கிறது என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. இதற்கு போதுமான கற்பித்தல், விழிப்புணர்வு சரியாக சென்று சேரவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.
”இதற்காக அரசாங்கமே முன்னெடுத்து வீட்டுக்கொரு கழிவறையைக் கட்டிக் கொடுத்தாலும் இந்த நிலை மாறாது. அதன் சுகாதாரத்தை அவர்கள் உணர விழிப்புணர்வும் கற்பித்தலுமே அவசியம். அதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்துவிட்டால் அரசாங்கம் வலிந்து கட்டிக்கொடுக்க அவசியமில்லை” என்கிறார் ராபர்ட்.
இதற்காக இந்த வருட கழிவறை தினத்திற்காக பயன்படுத்தப்படும் தீம் ’யாரையும் பின்னால் விடாதீர்கள்’ (leave no one behind) என்பதுதான். இதை ஐக்கிய நாடுகள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் அவர்களின் இந்த வருட குறிக்கோள் 2030-க்குள் பாதுகாப்பான கழிவறை பயன்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான். அதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளது ஐக்கிய நாடுகள் சபை.

Loading...

லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Loading...