ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உலக தலசீமியா தினம் 2022: மரபணு நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..

உலக தலசீமியா தினம் 2022: மரபணு நோய் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை..

உலக தலசீமியா தினம் 2022

உலக தலசீமியா தினம் 2022

What is Thalassemia Disease : தலசீமியா என்பது ஒரு பரம்பரையாக ஏற்படும் மரபணு இரத்தக் கோளாறு ஆகும்.

பொதுவாக, ஒரு சில நோய்கள் மற்றும் குறைபாடுகள் இருப்பதே தெரியாது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சர்க்கரை நோய், புற்று நோய் என்பதெல்லாம் மிகவும் அரிதான நோயாக இருந்தது. அதே போல, பத்தாண்டுக்கு முன்பு வரை தைராய்டு குறைபாடும், PCOS, எண்டோமெட்ரியோசிஸ் உள்ளிட்ட குறைபாடுகளும் என்னவென்றே தெரியாமல் இருந்தன. அல்லது, அவ்வகையான குறைபாடுகள் இருக்கிறது என்பது தெரியாமல் இருந்தது. அதே போல, மரபணு சார்ந்த பலவித நோய்கள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. சில நோய்கள் தீவிரமான தன்மையைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று தான் தலசீமிய என்று கூறப்படும் ரத்த சம்மந்தப்பட்ட நோயாகும். இது ஒரு மரபணு கோளாறு மற்றும் பரம்பரையாக பாதிப்பை ஏற்படுத்தும்.

உலக தலசீமியா தினம் 2022 :

மே மாதம் 8 ஆம் தேதி, உலக தலசீமியா தினமாக தலசீமியா இன்டர்நேஷனல் ஃபெடரேஷன் 1994 ஆம் ஆண்டு அன்று அறிவித்தது. இந்த நோயின் தீவிரத்தன்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதால், இதற்காக ஒரு தினத்தை அறிவித்து, TIF அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் நோயைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இந்த அமைப்பைத் தொடங்கியவரின் மகன் தலசீமியாவால் இறந்து போனதால், தன்னுடைய மகனின் நினைவாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, உலக தலசீமியா தினத்துக்கான கருப்பொருள், ‘விழிப்புணர்வு, பகிர்தல் மற்றும் பராமரித்தல்: தலசீமியா பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு சமூகத்தில் ஒருங்கிணைந்து செயல்படுதல்’ ஆகும்.

தலசீமியா என்றால் என்ன?

தலசீமியா என்பது ஒரு பரம்பரையாக ஏற்படும் மரபணு இரத்தக் கோளாறு ஆகும். உடலுக்குத் தேவையான ஹீமோகுளோபினை உடலால் உருவாக்க முடியவில்லை என்பது தான் இந்தக் குறைபாடு ஆகும். இதனால், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் பலவீனமடைந்து, அழிந்தும் போகின்றன. சிவப்பணுக்கள் இல்லை என்றால், உடலில் ரத்த ஓட்டம், உற்பத்தி என்று எல்லாமே பாதிக்கப்படும். குறிப்பாக, தீவிரமான ரத்த சோகை, மூச்சுத்திணறல், மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு ஆகியவை ஏற்படும்.

also read : உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் சில முக்கிய அறிகுறிகள்!

தலசீமியா இரண்டு வகைப்படும்:

ஆல்ஃபா தலசீமியா – குரோமோசோம்களை அழிக்க கூடியது

பீட்டா தலசீமியா – சிவப்பணுக்களில் நச்சுக்களை அதிகரிக்கின்றன

உலக தலசீமிய தினத்தின் முக்கியத்துவம்

தலசீமியா பரம்பரை நோய் என்பதால், பலரும் தெரியாமலேயே தங்களின் குழந்தைக்கு இந்த நோய் ஏற்படக் காரணமாக உள்ளனர். முறையான சோதனை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலம், நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிகையை குறைக்க வேண்டும்.

பலருக்கும், இப்படியொரு மரபணு நோய் இருப்பது தெரியாமல் இருக்கலாம். எனவே, இதைப் பற்றி பலருக்கும் சென்றடைய வேண்டும் என்று விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீவிர தலசீமியா பாதிப்புடன் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் 10,000 முதல் 15,000 குழந்தைகள் பிறப்பதாக இந்திய தேசிய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. உலக அளவில், பாதிப்படைந்த குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 300,000 முதல் 500,000 ஆக அதிகரிக்கிறது. மேலும், இந்தியாவில் தோராயமாக 67,000 நோயாளிகள் பீட்டா தலசீமியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Disease