இன்று உலக தூக்க தினம் - யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா?

இன்று உலக தூக்க தினம் - யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் தெரியுமா?

கோப்புப் படம்

பொதுவாக ஒருவர் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தூக்கமின்மை என்பது தனிமனித பிரச்சனையாக இல்லாமல், மாறி வரும் காலச்சூழலில் சமூக ஆரோக்கிய பிரச்சனையாக உருமாறியுள்ளது. பொதுவாக ஒருவர் 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. உண்மையில், உடலுக்கு ஏற்ப தண்ணீரை எப்படி எடுத்துக்கொள்கிறோமோ? அதைப்போல உடலின் தன்மைக்கு ஏற்ப தூக்கத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள், மனக்குழப்பம் உள்ளிட்டவைகளை எதிர்கொள்ள நேரிடும்.

சமூகத்தில் தூக்கத்தின் அவசியத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் இரவு மற்றும் பகல் சமமாக இருக்கும் வெள்ளிக்கிழமை நாளில் தூக்கம் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2021ம் ஆண்டுக்கான தூக்க தினம் உலகளவில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் இருக்கும் ஸ்லீப் பவுண்டேஷன் என்ற அமைப்பு 2008ம் ஆண்டு தூங்க தினத்தை உருவாக்கியது. அன்று முதல் தூக்க தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தூக்கத்தை பாதிக்கும் காரணிகள், தூக்கம் மீது மக்களுக்கு இருக்கும் அக்கறையின்மை, தூக்கத்தால் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கியம், தூக்கமின்மையால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் ஆகியவற்றை கொண்டு சேர்க்கும் பணியில் ஸ்லீப் பவுண்டேஷன் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.

Also read... உடலை ஃபிட்டாக வைத்திருக்க சைக்ளிங் செய்கிறீர்களா..? அதற்கு எத்தனை மணி நேரம் , எப்படி ஓட்ட வேண்டும் என தெரிந்துகொள்ளுங்கள்..!

தூக்கமின்மையினால் ஏற்படும் பாதிப்புகள் ஒரே நாளில் அதற்கான விளைவுகளை வெளிப்படுத்தாது என கூறும் நிபுணர்கள், நாளடைவில் மிக பெரிய ஆரோக்கிய பிரச்சனைகள் உருவாக காரணமாக இருக்கும் என எச்சரிக்கின்றனர். உதாரணமாக, மனக் குழப்பம், முடிவெடுக்க முடியாமல் தவித்தல், ஞாபக மறதி போன்ற பிரச்சனைகள் உருவாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆகையால், தூக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் இந்த நாளில் தூக்கம் ஏன் அவசியம், யார் யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.

பிறந்த குழந்தையானது ஏறத்தாழ 14 முதல் 17 மணி நேரம் வரை தூங்கலாம். ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் 13 மணி நேரம் வரை தூங்க வேண்டும். டீன் ஏஜ் வயதில் இருப்பவர்கள் அதிகபட்சமாக 9 முதல் 11 மணி நேரம் வரையில் உறங்கிக்கொள்ளலாம். இளைஞர்கள் 7 முதல் 9 மணி நேரம் வரையிலும், வயது மூத்தவர்கள் 8 மணி நேர தூக்கத்தையும் கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும். இது அடிப்படையான விஷயம் என்பதால் அதிகம் உழைப்பவர்கள், நோய்வாய்ப்பட்டு சிகிச்சை எடுப்பவர்கள் மற்றும் நாள்தோறும் மருந்து மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு உறக்க நேரம் மாறுபடும். பணியின் தன்மைக்கு ஏற்பவும் தூக்க நேரத்தை மாற்றிக்கொள்வது நல்லது.

சிலர் இரவில் அதிக நேரம் விழித்திருப்பதை பெருமையாக சொல்லிக்கொள்வார்கள். உண்மையில், உரிய நேரத்தில் தூங்கவில்லை என்றால் உடலுக்கு ஆபத்து என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என கூறலாம். அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, செல்போன் மற்றும் இணையதளங்களில் அதிக நேரம் செலவிடுவது தூக்கமின்மைக்கு காரணமாக அமைகின்றன. அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவது தூக்கமின்மையை கெடுப்பதுடன் மூளையின் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இரவில் இசையை கேட்டுக்கொண்டு தூங்குவது, காபி உள்ளிட்ட பானங்களுக்கு அடிமையாக இருப்பதும் ஆரோக்கியமான தூக்கம் இல்லை என்பதை உணர்த்தக் கூடிய காரணிகளாகும். தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிக மிக இன்றியமையாதது என்பதை உணர்ந்து, இனி வரும் காலங்களில் தூக்கத்தை தவிர்ப்பதை தவிர்ப்போம்!உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: