• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • இன்று சர்வதேச கடல் தினம் 2021 : மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் 'கடல் வணிகம்'...

இன்று சர்வதேச கடல் தினம் 2021 : மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பும் 'கடல் வணிகம்'...

உலக கடல் தினம்

உலக கடல் தினம்

கடலை மட்டுமே நம்பி பெரும் பொருளாதாரம் அடங்கியிருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை ஆகும். 1948ல் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் 'ஐஎம்ஓ' என்ற 'சர்வதேச கடல்சார் அமைப்பு' உருவாக்கப்பட்டது.

  • Share this:
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் இறுதி வாரம் "உலக கடல் நாள்" உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச கடல்சார் அமைப்பான ‘ஐஎம்ஓ’இதை கடைபிடித்து வருகிறது.

இன்று செப்டம்பர் 30, இந்த வருடத்திற்கான 'உலக கடல் தினம்' கொண்டாடப்படுகிறது. கடல் பாதுகாப்பு மற்றும் அதன் சூழல் போன்றவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் "சர்வதேச கடல்சார் அமைப்பு" உலக கடல் நாளில் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.

உலக பொருளாதாரத்தில் 'கடல் சார் பொருளாதாரம்' பெரும்பங்கு வகித்து வரும் நிலையில், கடலை மட்டுமே நம்பி பெரும் பொருளாதாரம் அடங்கியிருக்கிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை ஆகும். 1948ல் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் 'ஐஎம்ஓ' என்ற 'சர்வதேச கடல்சார் அமைப்பு' உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பின் முதன்மையான நோக்கம் கப்பல்களுக்கான ஒழுங்குமுறைகளை உருவாக்கி பராமரிப்பது ஆகும். இது ‘ஐஎம்சிஓ’ என்ற பெயரையும் பெற்றுள்ளது.இது ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கடல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், சட்ட சிக்கல்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் செயல்திறன் போன்ற பகுதிகளை கண்காணித்து செயல்படுத்துவது ‘சர்வதேச கடல்சார் அமைப்பின் முதன்மையான நோக்கம். முதன் முறையாக 'உலக கடல் தினம்' மார்ச் 17, 1978 அன்று கொண்டாடப்பட்டது.



ஏற்கனவே கூறியது போல், உலக பொருளாதாரத்தில் கடல் வணிகம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்தியா, சீனா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற உலகின் பெரிய நாடுகள் அனைத்தின் பொருளாதாரத்தில் ‘கடல்’ வணிகமே பெரும் பங்கை கொண்டுள்ளது என்பது உண்மை. இத்தகைய கடல் வணிகத்தை குற்றச்செயல்கள் இல்லாதவாறு கொண்டு செல்வது மிகப்பெரிய காரியம்.

உங்களுக்கு தெரியுமா..? இந்த நாடுகளில் சூரியனே மறையாதாம்..!

 

 

இதனை சர்வதேச கடல்சார் அமைப்பு செய்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்தின் பங்களிப்பு பற்றிய விழிப்புணர்வையும் அவ்வப்போது ஏற்படுத்தி வருகிறது. உலக கடல் தினமான இன்று பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உலகம் முழுவதிலும் நடத்தி வருகிறது சர்வதேச கடல்சார் அமைப்பு. கோவிட் 19 தொற்று காலத்தில் அனைத்து நாடுகளின் பொருளாதாரம் தலைகீழ் ஆனது. கொரோனா முதல் அலை,இரண்டாம் அலை என்று வரிசையாக வந்தது.



 

தற்போது 3வது அலை வருமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. இதில் மக்களின் அடிப்படை வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மக்கள் மட்டும் என்றில்லாமல், நாடுகள் அனைத்தும் பொருளாதார இழப்பை சந்தித்தன. மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வரும் இந்த சூழலில் ‘உலக கடல் தினம்’ கொண்டாடப்படுவது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உலகின் எல்லா நாடுகளையும் சேர்ந்த கடற்படையை சேர்ந்தவர்கள் கடல் குறித்தும், அதன் பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றையும் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த வருடத்தின் நோக்கமாக, கப்பலின் வருங்கால மையத்தில் கடற்படையினர் என்ற கருப்பொருள் வைக்கப்பட்டுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: