ஆண்டு முழுவதும், வரலாற்று நிகழ்வுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல நாட்களையும், சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த தியாகிகளையும், சில சிறிய பிரமுகர்களையும், சிறப்பு மிக்க நாட்களையும் நினைவுக்கூறும் வகையில் நாம் கொண்டாடி வருகிறோம். அதேபோல, இன்று - நவம்பர் 13ம் தேதி பலரின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் நீண்ட தூரம் செல்லக்கூடிய ஒரு பண்பைக் கொண்டாடும் நாளாக அமைந்துள்ளது. அதாவது இன்றைய சனிக்கிழமை உலக கருணை தினத்தைக் குறிக்கிறது.
இந்தநாளின் வரலாறும் முக்கியத்துவமும்:
விழிப்புணர்வு நாட்கள் வலைத்தளத்தின்படி, உலக கருணை தினம் முதன்முதலில் 1998 இல் உலக கருணை இயக்கம் என்ற அமைப்பால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் 1997ம் ஆண்டு டோக்கியோவில் உலகெங்கிலும் உள்ள ஒத்த எண்ணம் கொண்ட கருணை அமைப்புகளின் மாநாட்டில் உருவாக்கப்பட்டது. யுனைடெட் கிங்டமில், கைண்ட்னஸ் டே யுகே அதாவது கருணை தினம் யுகே என்பது கைண்ட்னஸ் UK-ஆல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு எந்த ஒரு லாப நோக்கத்திற்காகவும் உருவாக்கப்பட்டது அல்ல.
அதன்படி கருணை நாள் UK 2010ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி அன்று தொடங்கப்பட்டது. பல ஆண்டுகளாக, தனிநபர்கள், பள்ளிகள், தொண்டு நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் வணிகங்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்பதன் மூலம் இந்த நிகழ்வு பிரபலமடைந்து வருகிறது.
Must Read | உங்களுக்கும் இருக்கலாம் ஆர்த்தோரெக்ஸியா நோய்! ஆர்த்தோரெக்ஸியா என்றால் என்ன? கண்டறிவது எப்படி?
எந்தவொரு உண்மையான விளைவுகளும் இல்லாமல் ஒருவரை ட்ரோல் செய்வது அல்லது மற்றவர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்துவது போன்ற விஷயங்கள் எளிதாக இருக்கும் சமூக ஊடக யுகத்தில் இரக்கம் என்பது மிக அரிதாகிவிட்டது. ஒருவரின் முயற்சியைப் பாராட்டுவது போன்ற எளிய செயல்கள் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதை நினைவூட்டுவதற்காக உலக கருணை தினம் கொண்டாடப்படுவது அவசியமாக உள்ளது. ஒருவர் தங்களின் கருணையை வெளிப்படுத்தவும், அதையே பின்பற்ற மற்றவர்களை ஊக்குவிக்கவும் பல வழிகள் உள்ளன.
நாம் எப்படி அன்பாக இருக்க முடியும்?
உங்கள் கருணைப் பயணத்தை நோக்கி நீங்கள் சில உந்துதலைத் தேடுகிறீர்களானால், உங்களுக்கான ஒரு எளிய உதாரணம் பின்வருமாறு. உங்களிடம் ஒரு சக அல்லது வகுப்புத் தோழன் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள், அவர் எப்போதும் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்கிறார்.
அவர்களின் நேர்மையான முயற்சிகள் பற்றி நீங்கள் அறிந்திருந்தால், ஏதேனும் ஒரு உரையாடலில் அல்லது ஒரு செய்தியில் இதைக் குறிப்பிட சிறிது நேரம் ஒதுக்குங்கள். இது நிச்சயமாக உங்கள் சக அல்லது வகுப்புத் தோழரை மகிழ்ச்சியடையச் செய்யும். மேலும், சிறிது மகிழ்ச்சியைப் பரப்பியதற்காக உங்களைப் பற்றி நீங்களே நன்றாக உணருவீர்கள். இதுவும் கருணையின் வடிவம்தான்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: History, Social media, Trending