Home /News /lifestyle /

World Health Day 2022 : சுற்றுச்சூழல் பாதிப்பால் நோய் தொற்றுகள் அதிகரிப்பு : 1.3 கோடி பேர் இறப்பதாக WHO அறிக்கை

World Health Day 2022 : சுற்றுச்சூழல் பாதிப்பால் நோய் தொற்றுகள் அதிகரிப்பு : 1.3 கோடி பேர் இறப்பதாக WHO அறிக்கை

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுச்சூழல் பாதிப்பு

சுற்றுசூழல் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டுமே கிட்டத்தட்ட 1.3 கோடி அளவுக்கு உலகம் முழுவதிலும் மக்கள் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது.

1948 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உலக சுகாதார அமைப்பின் (World Health Organization) உருவாக்கத்தை கொண்டாடும் விதமாக ‘உலக சுகாதார தினம்’ ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 7 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. WHO என்று பரவலாக அறியப்படும் இந்த அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு தீமின் அடிப்படையில் இந்த நாளை கொண்டாடுகிறது.

சுற்றுசூழல் பாதிப்பால் ஒவ்வொரு ஆண்டுமே கிட்டத்தட்ட 1.3 கோடி அளவுக்கு உலகம் முழுவதிலும் மக்கள் இறக்கிறார்கள் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டது. உலக மக்கள் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமல் இருப்பதற்கு நம் பூமி ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த ஆண்டின் தீம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தீமின் பெயர் - Our planet, Our Health (நம் பூமி, நம் ஆரோக்கியம்).

குளோபல் வார்மிங்கால் மக்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?

பூவி வெப்பமடைவதை தான் குளோபல் வார்மிங் என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே புவி வெப்பமடைவதைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பூமியின் தட்ப வெப்பம் அதிகரிக்கும் பொழுது ட்ராபிகல் இடங்களில் மனிதர்களின் ஆரோக்கியம் கேள்விக்குரியதாக மாறி வருகிறது. குளோபல் வார்மிங் பிரச்சனையால் நேரடியாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.



உதாரணமாக இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து அதனால் ஏற்படக்கூடிய தீவிரமான நோய்களான மலேரியா, டெங்கு காய்ச்சல் மற்றும் வேறு சில நோய் கிருமிகளால் உண்டாகும் நோய்கள் யாவும் மனிதர்களை பெரிய அளவில் பாதிக்கிறது. அதிகப்படியான வெப்பத்தால் பகல் பொழுது மட்டும் அன்றி இரவிலும் குளிச்சிஇன்றி கணிசமான அளவு வெப்பமான சூழலே நிலவி வருகிறது. இதனால் விவசாயம், உணவு பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆபத்து நேரும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், எல்லா மனிதர்களாலும் நாட்பட்ட வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாது. ஏற்கனவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அதிகமான வெப்பம், உடல்நலத்தை மோசமாக்கும்.

நுரையீரல் தொற்று நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் சிவப்பு ரத்த அணுக்களில் வாழ்கின்றன - புதிய ஆய்வில் அதிர்ச்சி..!

பின்தங்கிய நாடுகளில் இந்த பருவநிலை மாற்றங்கள் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் :

பருவநிலை மாற்றங்களால் கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கு 1,50,000 நபர்கள் இறக்கிறார்கள் என்று WHO ஏற்கனவே ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளது. இன்னும் 10 ஆண்டுகளுக்குள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக மாறலாம் என்றும் கூறியுள்ளது. பின்தங்கிய நாடுகள் மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் ஏற்படக்கூடிய பருவ நிலை மாற்றங்கள் மக்கள் தொகை, ஏழ்மை மற்றும் நோய்களையும் கணிசமாக அளவு அதிகரிக்கிறது.



பருவநிலை மாற்றம் ஏற்கனவே இருக்கும் நோய்கள் மற்றும் நோய் தொற்றுகளை உண்டாக்கும் கிருமிகளை வேறு மற்ற இடங்களுக்கும் எளிதாக பரப்புகிறது. என்று என்விரான்மென்டல் ஹெல்த் சைன் கல்வி நிறுவனம் கூறியுள்ளது அதுமட்டுமின்றி மோசமான காற்றின் தரம் நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு அல்லது பலவீனம் இருப்பவர்களின் உடல் நலத்தை மோசமாக்கி, ஆஸ்துமா, கிட்னி பெயிலியர் குறைப்பிரசவம் ஆகிய ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. இதை தவிர்த்து தண்ணீரால் ஏற்படக்கூடிய நோய்களும் அதிகமாக ஏற்படலாம்.

அன்றாட உணவில் இந்த 6 சிறு தானியங்களை சேர்த்துப்பாருங்கள் : உடல் நலப் பிரச்சனைகளே வராது..!

குளோபல் வார்மிங்கால் இந்தியாவில் எத்தகைய பாதிப்பு ஏற்படும் :

இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும் அதிகமாக காணப்படும் நோய்களில் ஒன்று தொற்றுநோய். கோவிட் தொற்று என்பதை தவிர்த்து டெங்கு காய்ச்சல், மலேரியா, காசநோய் ஆகியவை இந்தியாவில் எளிதாக பரவக்கூடிய நோய்களில் முதன்மையில் இருப்பவை. இந்தியாவில் மழைக்காலத்தில் டெங்கு அதிகமாக பரவுகிறது என்று WHO கூறியுள்ளது.



பூமி ஆரோக்கியமாக இல்லாமல் புவி வெப்பமடைவதால் இந்த தொற்று நோய் பாதிக்கும் தன்மை தீவிரமாகும் மற்றும் அதிக எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமின்றி குளோபல் வார்மிங்கால் இந்தியாவில் பல இடங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹீட்வேவ் என்று கூறப்படும் திடீரென்று அதிகரிக்கும் வெப்பச்சலனம் இந்தியாவில் பரவலாக மார்ச் முதல் ஜூன் மாதம் வரை காணப்படுகிறது.

 

இந்த அதீத வெப்பத்தால் 2500 மேற்பட்ட நபர்கள் சில ஆண்டுகளுக்கு முன் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இதனால் மின்வெட்டு, உணவு தட்டுப்பாடு மற்றும் வாழ்வாதார பிரச்சனை ஆகியவையும் ஏற்படுகிறது. இந்தியாவில் ஏற்படக்கூடிய அதீதமான பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நபர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Global warming, Viral infection

அடுத்த செய்தி