இன்று உலக உணவு பாதுகாப்பு நாள்: நல்ல காய்கறிகள் பழங்கள் வாங்குவது எப்படி?

காய்கறிகளைப் பார்த்து வாங்குவது என்பது இன்றையக் காலகட்டத்தில் மிகப்பெரும் டாஸ்க்.

news18
Updated: June 7, 2019, 10:04 PM IST
இன்று உலக உணவு பாதுகாப்பு நாள்: நல்ல காய்கறிகள் பழங்கள் வாங்குவது எப்படி?
காய்கறிகளை வாங்க டிப்ஸ்
news18
Updated: June 7, 2019, 10:04 PM IST
காய்கறிகளைப் பார்த்து வாங்குவது ஒரு பெரிய டாஸ்க் தான். இரசாயன கலப்படம், பராமரிப்பின்மை, சரியான விளைச்சலின்மை போன்ற காரணங்களால் காய்கறிகள் பழங்களின் தரம் தற்போது சரியில்லை. இது உலக அளவில் சந்தித்து வரும் மிகப்பெரும் பிரச்னை. அதனால் ஐக்கிய நாடுகள் சபை, ஒவ்வொரு ஜூன் 7 அன்று உணவுப் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்க அறிவித்தது.

உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஆரோக்கியமான காய்கறிகளை எவ்வாறுப் பார்த்து வாங்குவது என்று பார்க்கலாம்.
பச்சைக் காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் : கீரைகள், புரொக்கோலி, பசலைக் கீரை, கொத்தமல்லி தண்டுகள் போன்றவற்றை வாங்கும்போது அவை பச்சையாக ஃப்ரெஷாக இருந்தால் மட்டுமே வாங்குங்கள். மஞ்சள் , கருஞ்சிவப்பு என நிறம் மங்கி காணப்பட்டால் அவற்றை வாங்காமல் தவிர்ப்பது நல்லது.

கோஸ் : கோஸ் வெளியே பார்க்கும்போது வெள்ளையாகப் பளபளக்கும். ஆனால் உள்ளுக்குள் அழுகியிருக்கும். அதைக் கண்டறிய அதன் தலைப் பகுதியைப் பாருங்கள். அதை நகத்தால் அழுத்தியும், கீரியும் பாருங்கள். உறுதியாக இருந்தால் வாங்குங்கள். அழுகிய நிலையில், கருப்பாக இருந்தால் தவிர்த்துவிடுவது சிறந்தது.Loading...

தரைக்கடியில் விளையும் காய்கறிகள் : கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்ற தரைக்கடியில் விளையும் காய்கறிகள் நன்றாக இருக்கிறதா, கெட்டுப் போய்விட்டதா என்பதைக் கண்டறிவது கடினம். இருப்பினும் அதன் தோல் எளிதில் சுருங்கிவிடும். அதன் தோல் சுருங்கியோ , கீறல் விழுந்தோ இருந்தால் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

வெங்காயம் மற்றும் பூண்டு : வெங்காயமும், பூண்டும் உறுதியாக இருந்தாலே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அதுவே அதன் மேல் செடி முளைத்து, தோல் நீங்கி இருந்தால் அதை வாங்க வேண்டாம்.திராட்சை : திராட்சைக் கொத்தை அப்படியே தூக்கிப் பாருங்கள், எந்தப் பழமும் விழாமல் இருந்தால் வாங்கலாம். அவை உதிர்ந்தால் வாங்க வேண்டாம்.

சிட்ரஸ் பழங்கள் : எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்கள் மேல் பழுப்பு நிறம் அல்லது கருஞ் சிவப்பு நிறத்தில் தோலில் புள்ளிகள் காணப்பட்டால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: June 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...