இன்று உலக சுற்றுச்சூழல் தினம் - ஒரு சிறிய கடமை மூலம் எதிர்கால சந்ததியினருக்காக பூமியை பாதுகாக்கலாம்

ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினம் ஒரு கருப்பொருளை கொண்டிருக்கும். இந்த ஆண்டிற்கான (2019-க்கான) தீம் "காற்று மாசுபாடு" ஆகும்.

Vaijayanthi S | news18
Updated: June 5, 2019, 1:23 PM IST
இன்று உலக சுற்றுச்சூழல் தினம் - ஒரு சிறிய கடமை மூலம் எதிர்கால சந்ததியினருக்காக பூமியை பாதுகாக்கலாம்
காற்று மாசுபாடு
Vaijayanthi S | news18
Updated: June 5, 2019, 1:23 PM IST
உலகளாவிய விழிப்புணர்வு மற்றும் நமது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இது 1974 -ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

உலகளவில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 5-ம் தேதி உலகளாவிய சூழலைக் கவனித்துக்கொள்ளும் தினமாக அறிவிக்கப்பட்டது.

நாம் ஒவ்வொரும் பூமியை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதையும் அவற்றை மாசு அடையாமல் கவனித்துக்கொள்வதற்கு கூடிய விஷயங்களையும் இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.


பருவநிலை மாற்றம்

இந்த 21-ம் நூற்றாண்டில் காலநிலை மாற்றம் என்பது நம்மை மிகவும் அச்சுறுத்தும் ஒன்றாக மாறிவிட்டது. காலநிலை மாற்றம் என்பது மக்களின் குடியேற்றம், மாறிவரும் உணவு முறை, புதிதாக கட்டியெழுப்பபடும் கட்டடங்கள், நகரங்கள் அதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் பல இடங்களில், வெப்பநிலை மாற்றங்கள் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு ஏற்கனவே அதிகரித்துள்ளதால் சுற்றுச்சூழல் அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால் மனிதனுடைய நலனும் பாதிக்கப்படுகிறது.

Loading...

ஒவ்வொரு வருடமும் உலக சுற்றுச்சூழல் தினம் ஒரு கருப்பொருளை கொண்டிருக்கும். இந்த ஆண்டிற்கான (2019-க்கான) தீம் "காற்று மாசுபாடு" ஆகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான முக்கியமான காரணி, காற்று, உயிரியல் பாதுகாப்பு, வேதியியல் மற்றும் அதன் கழிவுகள், காலநிலை மாற்றம், பேரழிவுகள், போன்ற அனைத்து அம்சங்களிலும் மனிதர்களின் பங்கு பொதுவான காரணியாக உள்ளது.

பருவநிலை மாற்றம் -  கோப்புப் படம்


அதனால் அவர்கள் எரிபொருள்களை எரிப்பதை குறைக்க வேண்டும். காடுகளை அழிப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். அதிகமான மரங்கள் மற்றும் செடிகளை நட வேண்டும். காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகளை கையாள வேண்டும். மேலும் இயற்கை வளங்களை சிறப்பாக பயன்படுத்துவது என நாம் ஒவ்வொருவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

காற்று மாசுபாடு

இந்தியாவில் 2030-ம் ஆண்டில் 670 மில்லியன் மக்கள் மாசுப்பட்ட காற்றை சுவாசிப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலகில் தற்போது காற்று மாசுபாட்டின் நிலைமை மிக மோசமாக உள்ளது. உலகம் முழுவதும் சுற்றுச் சூழல் ஆபத்தில் உள்ளது. பூமி வெப்பமயமாதலால் சுற்றுச்சூழலில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவரவில்லை என்றால் இயற்கையின் முடிவுகள் மிகவும் மோசமாக இருக்கும். ஒரு புள்ளி விவரகணக்கின்படி, உலகளவில் 93 சவீதம் மக்கள் காற்று மாசுபாடுள்ள சுற்றுப்புறங்களில் வசித்து வருகின்றனர்.

காற்று மாசு அடைந்த இந்தியா


காற்று மாசுபாட்டால் உலகில் ஆண்டுக்கு 70லட்சம் பேர் இறக்கின்றனர். உலகிலேயே மிகவும் மாசு அடைந்த நாடாக இந்தியா உள்ளது. இங்கு ஆண்டுக்கு 12 லட்சம் பேர் காற்று மாசுபட்டால் உயிரிழந்து வருகின்றனர்.

காற்று மாசால் ஏற்படும் பாதிப்புகள்:

மாசடைந்த காற்றில் சல்ஃபர் டையாக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு, காரீயம் எனப் பல்வேறு நச்சு வாயுக்கள் இருக்கின்றன. இவை, நாம் சுவாசிக்கும் காற்றுவழியே மனித உடலில் சென்று, ரத்தக்குழாயைச் சேதமடைய வைக்கின்றன.

காற்று மாசுபடுதல் இதயநோய்க்கு வழிவகுக்கும்


காற்றில் உள்ள மாசுபாடு அதிகரிப்பால் உடலின் ரத்த அழுத்தம் உயர்கிறது. இதனால் பக்கவாதப் பிரச்னையை எதிர் கொள்ளவேண்டிய நிலை ஏற்படுகிறது. தற்போது, குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த நோய்கள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் காற்று மாசுபாடேயாகும்.

காற்று மாசுபாட்டை தடுக்கும் வழிமுறைகள்

1. குப்பைகளை எரிப்பதை தவிர்த்துவிட்டு அதனை மறுசுழற்றி செய்யதல் நல்லது.

2. பிளாஸ்டிக்-கை பயன்படுத்துவதை தவிக்க வேண்டும்.

3. கார்கள், இரு சக்கர வாகனம் போன்றவற்றை தவிர்த்துவிட்டு, பொது போக்குவரத்தான பஸ்கள், ரயில் ஆகிவற்றை பயன்படுத்தலாம். சைகிள்களில் செல்வது மிகவும் நல்லது.

மாசுபட்ட இடங்கள்


4.ஒவ்வருவரும் ஒரு இலக்கை வைத்துக்கொண்டு மரம்,செடிகளை வளார்க்க வேண்டும். விதைகளை விதைக்க வேண்டும்.

5. வெப்பமயமாவதை தவிர்த்து உலகை மீட்க மரங்களை நடுவதே சிறந்த வழி.

 
First published: June 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...