கோவிட்-19 தொற்றால் சுற்றுசூழலுக்கு புதிதாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சறுத்தல்... ஐ.நா கவலை!

புதிதாக ஏற்பட்டுள்ள மிகப்பெரிய அச்சறுத்தல்

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, கடந்த நூற்றாண்டில் மொத்த ஈரநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிக்கப்பட்டுள்ளன.

  • Share this:
நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அதற்கான விழிப்புணர்வை ஊக்குவிக்க ஆண்டுதோறும் ஜூன் 5-ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டை போலவே பெருந்தொற்றுக்கு மத்தியில் நடப்பாண்டும் உலக சுற்றுச்சூழல் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான உலக சுற்றுச்சூழல் தின கருப்பொருள் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகும். ‘சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு’ என்பது காடழிப்பு, மாசுபாடு மற்றும் பிற மனித நடவடிக்கைகளால் சீரழிந்த சுற்றுச்சூழல் அமைப்புகளின் மீட்புக்கு உதவுவது. இதன்படி மரங்களை நடுதல், நகரங்களை பசுமையாக்குதல், ஆறுகள் மற்றும் கடற்கரைகளை சுத்தம் செய்தல், தோட்டங்களை மறுகட்டமைத்தல் உள்ளிட்ட பிற வழிகளில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு நடைபெறலாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் தகவல்படி, கடந்த நூற்றாண்டில் மொத்த ஈரநிலங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிக்கப்பட்டுள்ளன.மேலும் புவி வெப்பமடைதல் என்பது தொடர்ந்து ஆத்திகரித்து கொண்டே இருக்கிறது. மாசுபாடு நமது சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கும் நேரத்தில் தொற்று மூலமாக தற்போது புதிய மாசுபாடு ஒன்று சவாலாக இருக்கிறது. அது தான் மாஸ்க் மாசுபாடு (mask pollution). கோவிட்-19 தொற்றின் முக்கிய தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் மாறி போனதால், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒருமுறை அல்லது சிறிது நேரம் பயன்படுத்திய பின் தூக்கி எறிய கூடிய டிஸ்போசபிள் மாஸ்க்கின் (disposable mask) உற்பத்தி அபார வளர்ச்சி பெற்றுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

2020-ஆம் ஆண்டில் டிஸ்போசபிள் மாஸ்க்குகளின் உலகளாவிய விற்பனை மொத்தம் 166 பில்லியன் டாலர் என்று ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பு மதிப்பிட்டுள்ளது. பிற மருத்துவ கழிவுகள் போன்றே பயன்படுத்தப்பட்ட மாஸ்க்குகள் நிலப்பரப்புகள் அல்லது கடல்களில் குவிகின்றன. கட்டுப்பாடற்ற முறையில் மாஸ்க் கழிவுகளை குவிப்பது அல்லது எரிப்பது நாம் வசிக்கும் சுற்றுச்சூழலில் நச்சுகள் கலக்க வழிவகுக்கும். மேலும் ஒருவர் பயன்படுத்திய மாஸ்க்கில் இருந்து பிறருக்கு சுகாதார அபாயங்கள் பரவ கூடும் என்று ஐ.நா. சுற்றுச்சூழல் அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் தொற்று நோய் கழிவுகளை திறந்தவெளியில் வெளிப்படையாக எரிப்பது மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் மேலும் பாதிக்கும் தவிர தொற்றின் அடுத்தடுத்த கட்ட பரவலுக்கு வழிவகுக்கும். மாஸ்க் பொல்யூஷன் சுற்றுச்சூழல் பாதிப்புகளை மட்டுமல்ல சுற்றுலா மற்றும் உலகநாடுகளின் மீன்வளத் துறைகளையும் கடுமையாக பாதிக்கும்.

Also read... Corona Impact : கொரோனா குணமடைந்த பிறகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நீங்கள் செய்ய வேண்டியவை..!

எனவே ஐ.நா தொற்று கழிவுகளை சுத்திகரிக்க "அத்தியாவசிய பொது சேவை" என்கிற ரீதியில் முக்கியத்துவம் கொடுத்து செயலாற்றுமாறு உலகநாடுகளை வலியுறுத்தி உள்ளது. கோவிட்-19 தொற்றுக்கு முன்பிருந்தே பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் மாசுபாடு ஏற்கனவே ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருந்து வரும் நிலையில், தொடரிலிருந்து தற்காத்து கொள்ள பயன்படும் மாஸ்க் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்களின் திடீர் ஏற்றம் நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. டிஸ்போசபிள் மாஸ்க்குகள் சுற்றுசூழல் மாசு அபாயத்தை மேலும் கூட்டுவதால் நச்சு அல்லாத மக்கும் அல்லது மறுசுழற்சி செய்யக்கூடிய வகையிலான மாஸ்க்குள் உற்பத்தி செய்வதற்கான மாற்று வழிகளை ஊக்குவிக்க வேண்டிய அவசியம் தற்போது ஏறட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: