உலக சுற்றுச்சூழல் நாள்; இயற்கை பாதுகாப்புக்கு வீட்டில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்

மாதிரிப் படம்

வீட்டில் இருந்துவாறு சில தனிமனித ஒழுக்கங்களை கடைபிடித்தாலே நம்மால் இயற்கையின் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்ய முடியும்.

  • Share this:
உலக சுற்றுச்சூழல் நாள் ஜூன் 5 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களால் வெளியேறும் கரியமில வாயுக்கள் சுற்றுச்சூழல்களை கடுமையாக பாதிக்கின்றன. சுவாசிக்கும் காற்றில் இருந்து உண்ணும் உணவு வரை அவற்றின் தாக்கம் இருப்பதால், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இயற்கை மாசு மனித இனத்திற்கே ஆபத்து என்பதால், எதிர்கால சந்ததியினருக்கு நல்ல உலகை கொடுத்துவிட்டுபோகும் மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

அதற்காக பெரும் பணத்தை செலவு செய்து, வீதியில் இறங்கி தினம்தோறும் விழிப்புணர்வு மற்றும் போராட்டம் நடத்த வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்துவாறு சில தனிமனித ஒழுக்கங்களை கடைபிடித்தாலே நம்மால் இயற்கையின் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்ய முடியும்.

தண்ணீர் சேமிப்பு

நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு துளி தண்ணீரும் இயற்கையின் படைப்பில் நமக்கு கிடைக்கக்கூடியவை அவற்றை அநாவசியமாக வீணாக்குவதை தவிர்க்க வேண்டும். குளிக்கும்போது ஷவர் பயன்படுத்தினால், அதிக தண்ணீர் வீணாக வாய்ப்புகள் உள்ளன. பக்கெட்டில் தண்ணீரை வைத்து குளிக்கலாம். துணி துவைக்கும்போது போதுமான தண்ணீரை மட்டும் முடிந்தளவுக்கு பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும். பல் துலக்கும்போது பைப்புகளை திறந்து வைப்பதை தவிர்க்க வேண்டும்.

சிவப்பு இறைச்சியை குறைத்தல்

சிவப்பு இறைச்சி பயன்பாடு, காய்கறிகள் மற்றும் பயறு வகைகளுடன் ஒப்பிடும்போது கரியமில வாயு வெளியேற்றத்தில் 40 மடங்கு காரணமாக இருக்கின்றன. சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்தும் உபகரணங்களில், அதிகளவு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வாயுக்கள் வெளியேறுகின்றன. மேலும், சிவப்பு இறைச்சியை பதப்படுத்துவதற்கு அதிகளவு தண்ணீர் செலவழிக்கப்படுகிறது. இதனால், இந்த இறைச்சிகளை சாப்பிடுவதை குறைக்கலாம்.

உணவுகளை வீணாக வேண்டாம்

வீட்டில் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் வீணாவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். வாரத்துக்கு தேவையான காய்கறிகள் மற்றும் பழங்களை முன்கூட்டியே திட்டமிட்டு அவற்றை மட்டும் வாங்கி வைக்க வேண்டும். ஏதேனும் பழங்கள் வீணாகும் நிலையில் இருந்தால் அதனை முன்கூட்டியே பயன்படுத்தலாம் அல்லது குளிர்விப்பானில் வைத்து அடுத்த நாள் பயன்படுத்துங்கள். வீணாகும் ஒவ்வொரு பொருளின் உற்பத்தி பின்னணியில் பலரின் உழைப்புகள் இருக்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மறுசுழற்சி

பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். அன்றாடம் கடைகளுக்கு செல்லும்போது, வீட்டில் இருக்கும் பைகளை எடுத்துச் சென்று பொருட்களை வாங்குவதன் மூலம் பாலித்தீன் பைகளின் பயன்பாடு குறையும். வீட்டில் ஒரு பிளாஸ்டிக் பொருள் இருக்கும்போது மற்றொரு பொருளை வாங்க வேண்டாம். முடிந்தளவுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

வீட்டுத்தோட்டம்

வீட்டில் போதுமான இடம் இருப்பவர்கள் வீட்டிலேயே தோட்டம் அமைக்கலாம். அவற்றில் காய்கறி, கீரைகளை வளர்த்து சமைத்துக்கொள்ளலாம். அடுக்குமாடி வீடு என்றால் மாடித் தோட்டம் அமைக்கலாம். பழங்களை விளைவித்து ஆரோக்கியமான பழங்களை சாப்பிடலாம். இயற்கை உரங்களை பயன்படுத்துங்கள். செயற்கை உரங்களை உபயோக்கிக்க வேண்டாம்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: