இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

news18
Updated: July 12, 2018, 4:01 PM IST
இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்
கோப்புப் படம்
news18
Updated: July 12, 2018, 4:01 PM IST
இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம். குழந்தை தொழிலாளர்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 2002-ஆம் ஆண்டு முதல் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. குழந்தைகளின் வருமானம்,  குடும்பத்திற்கு அவமானம் என்ற வாசகங்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு பிரச்சாரத்தில் இருந்தாலும் இன்றளவும் வேலையிடங்களில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

குழந்தைகளின் முழு நேர வேலை பள்ளிக்கு செல்வதும், படிப்பதும் தானே வேலைக்கு செல்வதல்ல. பள்ளி விளையாட்டு மைதானங்களில் இருக்க வேண்டிய குழந்தைகள் செங்கல், சுண்ணாம்பு சூளைகளிலும், சுரங்கங்களிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும் பஞ்சு ஆலைகளிலும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

உலகளவில் 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது இன்றளவும் குற்றமாக உள்ளது. உலகில் 25 கோடி குழந்தை தொழிலாளர்கள் இருக்கிறார்கள் என்றும், அதில் 10 கோடி குழந்தை தொழிலாளர்கள் ஆபத்தான வேலைகளை செய்து வருவதாக யூனிசெப் நிறுவனம் கூறுகிறது. சிறு வயதிலே பணிக்கு செல்லும் குழந்தைகளுக்கு  மனநலத்திலும் பிரச்னைகள் வருவதாகவும் விரைவில் மது, புகை, புகையிலை போடுதல் போன்ற தீய பழக்க வழக்கத்திற்கு ஆளாகின்றனர் என பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.

இந்தியாவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. விவசாயம், தீப்பெட்டி, செங்கல், சூளை, டெக்ஸ்டைல், பேக்கிரி கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகள் ஆகியவற்றில் வேலை பார்க்கின்றனர்.

இந்தியாவில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி வழங்க வேண்டும் என்கிற சட்டத்தை நிறைவேற்றினால்தான் அதிகளவில் குழந்தைகள் பள்ளிக்கு செல்வர். பெரும்பாலான குழந்தைகள் குடும்ப சூழல் காரணமாகவே வேலைக்கு செல்கின்றனர். பெற்றோரின் நிரந்தர வருமானத்துக்கான  வேலைவாய்ப்பை அரசு வழங்கினால் அவர்களே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...